முருங்கைகாயை பொதுவா வீட்ல ஏதாவது காரக்குழம்பு வைக்கும் போது அது கூட சேர்த்து போடுவோம். இல்லைனா கத்திரிக்காய் புளிக்காய் வைக்கும் போது அது கூட முருங்கைக்காய் சேர்ப்போம். ஆனா இந்த மாதிரி வெறும் முருங்கைக்காய் மட்டுமே வச்சு முருங்கைக்காய் தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. நிறைய சின்ன வெங்காயம் பூண்டு எல்லாம் சேர்த்து செய்ற இந்த முருங்கைக்காய் தொக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். சுட சுட சாதத்துக்கு போட்டு பெசஞ்சு சாப்பிடும்போது அவ்ளோ ருசியா இருக்கும். இதுல நம்ம புளி சேர்க்க கூட தேவை இல்லை ஆனால் நல்லா தக்காளியோட புளிப்பே இறங்கி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
இது சாதத்துக்கு மட்டும் இல்லாம கலவை சாதங்களான தயிர் சாதத்துக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன் அப்படின்னு சொல்லலாம். அது மட்டுமில்லாமல் புளி சாதம் லெமன் சாதம், தேங்காய் சாதம் மாங்காய் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த முருங்கைக்காய் தொக்கு பாக்குறதுக்கே நாக்குல எச்சில் ஊற வைக்கும் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். சூப்பர் டேஸ்டான இந்த முருங்கைக்காய் தொக்கு கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாக்கணும். சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.
குழந்தைகளுக்கு இந்த தொக்குல சாதம் போட்டு பிசைந்து லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம். குழந்தைகள் டிபன் பாக்ஸை காலி பண்ணி தான் கொண்டு வருவாங்க .சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாவே இருக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரசிச்சு ருசித்து சாப்பிடக்கூடிய இந்த முருங்கைக்காய் தொக்கு ரெசிபி செய்றதும் கூட ரொம்ப ஈஸிதான். அதனால ரொம்ப நேரம் தேவைப்படாது குறைவான நேரத்தில் நிறைவா இந்த ரெசிபியை செஞ்சிடலாம். இப்ப வாங்க இந்த முருங்கைக்காய் தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முருங்கைக்காய் தொக்கு | Drumstick Thokku Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 முருங்கைக்காய்
- 10 சின்ன வெங்காயம்
- 7 பல் பூண்டு
- 2 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 2 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் தனியா தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் பூண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் உப்பு,குழம்பு மிளகாய்த்தூள், மிளகாய் தூள்,மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பிறகு நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து நன்றாக வதக்கி 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
- வெந்ததும் கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முருங்கைக்காய் தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டில் முருங்கைக்காய் இருந்தால் அதை வைத்து சுவையான இந்த முருங்கைக்காய் தோரன் செய்து பாருங்கள்!!!