கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் பிரபலமானது. இந்த பண்டிகையன்று நிறைய உணவுகளை தயாரித்து கடவுளுக்கு படைப்பார்கள். அப்படி படைக்கும் உணவுகளில் முருங்கைக்காய் தோரனும் ஒன்று. தோரன் என்றால் தமிழில் பொரியல் என்று பொருள். வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமை பலரது வீடுகளில் சைவ உணவாக இருக்கும். அதிலும் அன்று வைக்கும் சாம்பாரில் இருக்கும் முருங்கைக்காயை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு முருங்கைக்காயைக் கொண்டு வறுவல், குழம்பு என்று செய்து சுவைத்து போரடித்து விட்டதா? அப்படியானால் இன்று நாம் ஒரு அற்புதமான கேரள முருங்கைக்காய் ரெசிபியைக் காண்போம். அது தான் முருங்கைக்காய் தோரன்.
இது மிகவும் எளிமையான மற்றும் குறைவான பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடிய சுவையான சைடு டிஷ். மதியம் 10 நிமிடத்தில் ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய நினைத்தால், அதற்கு இந்த கேரளா முருங்கைக்காய் தோரன் சரியானதாக இருக்கும். இப்போது அந்த கேரளா முருங்கைக்காய் தோரனை எப்படி செய்வதென்று காண்போம். இது முற்றிலும் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி.
முருங்கைக் கீரையை போல, முருங்கைக்காயிலும் கால்சியம் மற்றும் இரும்பு சத்துகளும், வைட்டமின்கள் உள்ளிட்ட பிற சத்துகளும் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுவடையும். இதனால் நோயெதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கும். இந்த நன்மைகளை பெற, முருங்கைக்காயை தோரன் வடிவில் உண்ணுவது சிறப்பாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் இருப்போருக்கு முருங்கைக்காய் தோரன் செய்து கொடுங்கள். இந்த முருங்கைக்காய் தோரன் சற்று காரம் குறைவாக இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
முருங்கைக்காய் தோரன் | Murungaikai Thoran Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 3 முருங்கைக்காய்
- 1 கப் தேங்காய் துருவல்
- 10 சின்ன வெங்காயம்
- 5 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 4 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
செய்முறை
- முதலில் முருங்கைக்காயை தோல் சீவி விட்டு நடுத்தர துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து முருங்கைக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- பின் வேக வைத்த முருங்கைக்காயை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான முருங்கைக்காய் தோரன் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : முருங்கைக்காய் மசாலா கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!