- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 6
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
எப்போதும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரி சட்னி, சாம்பார், குருமா என்று செய்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? சிம்பிளாக, அதே சமயம் சட்டென்று செய்யக்கூடியவாறு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் வேண்டுமா? உங்கள் வீட்டில் 1 கப் பொட்டுக்கடலையும், இறால் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையைக் கொண்ட பொடி ஒன்றை தயாரித்துக் கொள்ளுங்கள்.
பொதுவாகவே இறால் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இறால் வைத்து என்னற்ற உணவுகளை செய்யலாம் இறால் குழம்பு, இறால் வறுவல், இறால் சுக்கா, இறால் கிரேவி என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் எப்போதும் போல் இல்லாமல் இறால் வைத்து சுவையான இறால் இட்லி பொடி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இறாலைக் கொண்டு செய்யப்படும் இந்த இட்லி பொடி வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் இருக்கும். இந்த இறால் இட்லி பொடி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த ருசியான இறால் இட்லி பொடியை ஒரே நாளில் சுலபமாக செய்திடலாம். இந்த பொடி சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். ஒரு மாதத்திற்கு ஸ்டோர் பண்ணி வைத்து சாப்பிடலாம். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான இறால் இட்லி பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் குறு மிளகு கிரேவி
Ingredients
Method
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து விட்டு இரண்டு நாட்கள் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பூண்டு, சின்ன வெங்காயம், புளி, காஷ்மீர் மிளகாய், காய்ந்த மிளகாய், மல்லி, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் உலர்ந்த இறால், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான இறால் இட்லி பொடி தயார்.






