மட்டன் எடுத்தால் மட்டன் குழம்பு மட்டன் சுக்கா மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா மட்டன் எடுத்தா ஒரு தடவை இந்த மாதிரி சிம்பிளான ஒரு ப்ரை செஞ்சு பாருங்க. வெறும் நாலஞ்சு பொருள் வச்சு மொறு மொறுப்பா சூப்பரான மட்டன் ஃப்ரை இந்த மாதிரி இதுவரைக்கும் நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. சிக்கன் ப்ரை கணவாய் ஃப்ரை இதெல்லாம் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மட்டன் ஃப்ரை ரொம்பவே வித்தியாசமா ரொம்பவே சூப்பரா இருக்கும். இதுல அதிகமான மிளகுத்தூள் சேர்த்து செய்யப் போறோம். சளி இருமல் பிரச்சனை இருந்தால் அந்த சமயத்துல இந்த மாதிரி ஒரு சூப்பரான மட்டன் பிரை ரெசிபி செஞ்சு பாருங்க கண்டிப்பா சளி இருமல் பறந்து போய் விடும்.
எப்போவுமே மட்டன் குழம்பு வச்சு சிக்கன் பிரை தான் செய்வோம் ஆனா ஒரு தடவை வித்தியாசமா சிக்கன் குழம்பு வச்சுட்டு மட்டன் வச்சு இந்த மாதிரி ஒரு ஃப்ரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவர்களுக்கும் எந்த மாதிரி ஒரு மட்டன் ஃப்ரை செஞ்சு கொடுத்து அசத்துங்க. வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போது அவங்களுக்கு விருந்து வைக்கும்போது உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு இந்த மாதிரி ஒரு மட்டன் ஃப்ரை செஞ்சு கொடுத்தா கண்டிப்பா உங்கள பாராட்டிட்டு தான் போவாங்க. அவ்ளோ டேஸ்டான சிம்பிளான மட்டன் பிரை ரெசிபி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
மட்டன் பிரை | Mutton Fry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 குக்கர்
Materials
- 1/2 கி எலும்பில்லாத மட்டன்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் சீரகத்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
Instructions
- ஒரு குக்கரில் மட்டனை கழுவி சேர்த்து அதனுடன் மிளகுத்தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றி ஐந்து விசில் விட்டு எடுக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வேக வைத்துள்ள கறியை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- கறி மொறு மொறுப்பாக வந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மட்டன் ஃப்ரை தயார்.
இதனையும் படியுங்கள் : அரைத்து விட்ட மட்டன் குழம்பு