- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish, snacks
முட்டை வைத்து என்னதான் விதவிதமா ரெசிபி செய்தாலும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில முட்டை வைத்து இந்த மாதிரி ஒரு தடவை வித்தியாசமா முட்டை சில்லி ஃப்ரை செஞ்சு பாருங்க ரொம்ப ருசியா இருக்கும். முட்டை வைத்து செய்யக்கூடிய அனைத்துமே முட்டை பிரியர்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா முட்டை பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும் ரசம் சாதம் தயிர்சாதம் தக்காளி சாதம் லெமன் சாதம் எல்லாத்துக்குமே அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.
சைடு டிஷ் ஆக மட்டுமில்லாமல் இதை அப்படியே ஸ்னாக்ஸ் மாதிரி கூட ஈவினிங் டைம்ல சாப்பிடலாம் ரொம்ப ருசியா இருக்கும். வீட்ல ஏதாவது ப்ரைட் ரைஸ் ரெசிபி ட்ரை பண்ணும் போது இந்த ரெசிபியை சைட் டிஷ் ஆக செய்து கொள்ளலாம். அவ்வளவு ருசியா இருக்கும். கடையிலிருந்து வெஜ் பிரைட் ரைஸ் கூட வாங்கிட்டு வந்து அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த ரெசிபியை செய்து பார்க்கலாம் நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபியாக இது இருக்கும். ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இதுல தக்காளி சாஸ் சோயா சாஸ் சில்லி சாஸ் எல்லாமே சேர்த்து செய்ய போறதால ரெஸ்டாரன்ட் ஃபீல் கிடைக்கும். கண்டிப்பா ரொம்ப ரொம்ப ஈஸியான இந்த ரெசிபியை வீட்ல ஒரு தடவ செஞ்சு அசத்துங்க. இந்த சூப்பரான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான ரெசிபியை ரொம்ப ரொம்ப ஈஸியா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!
Ingredients
Method
முட்டையை வேக வைத்து தோல் உரித்து ஒரு முட்டையை மூன்றாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையின் வெள்ளை கரு சோள மாவு அரிசி மாவு, உப்பு சேர்த்து கலந்து வெட்டி வைத்துள்ள முட்டையை முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் நறுக்கிய பூண்டு, நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு சில்லி சாஸ் சோயா சாஸ் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வெங்காயத்தாள் சேர்த்து இறக்கினால் சுவையான சில்லி எக் பிரை தயார்.






