- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner

அவல் வைத்து அவல் உருண்டை, அவல் கொழுக்கட்டை, ஸ்வீட் அவல் அப்டின்னு ஒரு சில இதை தாளித்து சாப்பிடுவாங்க. ஆனா இப்ப நம்ம முட்டை எல்லாம் சேர்ந்து காய்கறிகள் நல்லா சேர்த்து ஒரு சூப்பரான எக் பிரைடு போஹா ரெசிபி செய்யப் போறோம். இந்த ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். குழந்தைகளுக்கு எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசை சப்பாத்தி இன்னும் குடுக்காம இந்த மாதிரி சிம்பிளான ப்ரேக்பாஸ்ட் செஞ்சு கொடுத்து பாருங்க. இதனை பிரேக்பாஸ்ட் ஆகவும் சாப்பிடலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க இதுல நம்ம கேரட் குடைமிளகாய் சேர்த்திருக்கிறோம்.
உங்களுக்கு என்னென்ன காய்கறிகள் தேவையோ அதை சேர்த்து கொள்ளுங்கள். நிறைய முட்டை எல்லாம் சேர்த்து செய்ததால கண்டிப்பா இதை ரெசிபி சாப்பிடறதுக்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இதுல சோயா சாஸ் தக்காளி சாஸ் எல்லாம் சேர்த்து செய்ய போறோம் கண்டிப்பா ஒரு ரிச்சான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இதுக்கு நம்ம கெட்டியான அவல் தான் பயன்படுத்தனும். லேசான அவல் பயன்படுத்தினால் அவ்வளவு நல்லா இருக்காது. இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க.
குழந்தைகளுக்கு இதெல்லாம் கூட கொடுத்து விடலாம். கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. மீதம் வைக்காமல் கண்டிப்பா காலியாக கொண்டு வருவாங்க. இது சத்தான ரெசிபியும் கூட. குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடாமல் அடம் பிடிக்கிறாங்கன்னா அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு அதுல நிறைய காய்கறிகள் சேர்த்து கொடுத்திடுங்க. இந்த ஆரோக்கியமான ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான எக் பிரைடு போஹா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்ல அவல் இருந்தா இந்த அவல் கேசரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!






