- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா செய்து கொடுங்கள். பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் மசாலா பாஸ்தாவை செய்யலாம்.
இந்த பாஸ்தாவை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். பெரும்பாலும் மைதா மாவைப் பயன் படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப் படுகிறது. நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. என்ன தான் குழந்தைகள் இவற்றை விரும்பி சாப்பிட்டாலும், இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி சமைத்து கொடுக்க மனம் வராது.
ஆரோக்கியமற்ற உணவுகளை கொடுக்கிறோமே என்ற குற்ற உணர்வு எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும். இது போன்ற உணவுகளையும் ஆரோக்கியமாக மாற்றலாம். எப்படி என்று யோசிக்கிறீர்களா? மைதாவால் செய்யப்பட்ட பாஸ்தாவுக்கு பதிலாக கோதுமை கொண்டு தயாரிக்கப்பட்ட பாஸ்தாவை பயன்படுத்தலாம். மேலும் இதனுடன் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொடுக்கும் பொழுது அது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் மாறிவிடும். இப்போது சுவையான முட்டை மிளகு பாஸ்தா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
Ingredients
Method
முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இவை வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு முட்டையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
அதன்பிறகு மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டை மிளகு பாஸ்தா தயார்.






