- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
முட்டை வைத்து முட்டை பிரியாணி, முட்டை தொக்கு, முட்டை கிரேவி, முட்டை குழம்பு, ஆம்லெட், கார முட்டை அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்பீங்க. அந்த வகையில முட்டை வச்சு இந்த சூப்பரான தவா ப்ரை ஒரு தடவை செஞ்சு பாருங்க. செம டேஸ்டா இருக்கும். ரசம் சாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் லெமன் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே இந்த முட்டை தவா ஃபரை ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. நீங்க நிறைய முட்டை ரெசிபி செஞ்சி இருந்தாலும் இந்த ரெசிபி சாப்பிடறதுக்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும் நல்லா கிரிஸ்பியாவே இருக்கும். தோசை கல்லில் சேர்த்து தவா ஃபிரை செய்ய போறதால நிறைய எண்ணெய் தேவைப்படாது.
இந்த ருசியான டேஸ்டான முட்டை தவா ஃபிரை ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தைகளுக்கு ஏதாவது சிம்பிளான சாதம் செஞ்சுட்டு இந்த ரெசிபியை சைடிஷ் ஆக வைத்து விட்டால் கண்டிப்பா மீதமே வைக்காமல் சாப்பிட்டு விட்டு வருவார்கள். இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் ரெண்டு முட்டை கூட சாப்பிடுவாங்க. இதுல அரிசி மாவு இஞ்சி பூண்டு விழுது எல்லாமே சேர்த்து செய்றதால வாசனை ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். மொறு மொறுப்பாகவும் இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான முட்டை தவா ஃபிரை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!
Ingredients
Method
முட்டையை வேக வைத்து உரித்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் கரம் மசாலா, உப்பு அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதனை முட்டையின் இரு பக்கங்களிலும் தடவி தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான முட்டை தவா ஃப்ரை தயார்.






