- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பொதுவா ஒரு சிலருக்கு குழம்பு ரசம் தயிர் மோர் அப்படின்னு ஊத்தி சாப்பிடுவதை விட பலவகை சாதங்களான தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், லெமன் சாதம், வெஜிடபிள் சாதம் அப்படின்னு இந்த மாதிரி சாதங்கள் தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில நிறைய பேர் வீட்டுல செய்யக்கூடிய நிறைய பேரு வீட்டுல சுத்தமா செய்யாத ஒரு சாதமான எள் சாதம் தான் இப்ப நம்ம பாக்க போறோம். இந்த எள் சாதமும் ரொம்பவே சாப்பிடுவதற்கு ருசியா இருக்கும். இந்த எள்ளில் அதிக அளவுல சத்துக்கள் இருக்கு குறிப்பா பெண்களுக்கு இதுல அதிகப்படியான நன்மைகள் இருக்கு அப்படின்னு சொல்லலாம் தினமும் கூட பெண்கள் ஒரு டீஸ்பூன் எள் சாப்பிட்டு வந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. அப்படி சாப்பிட பிடிக்காதவர்கள் எப்பவாவது ஒரு தடவை கூட இந்த எள் சாதத்தை செஞ்சு சாப்பிடலாம்.
இந்த எள் சாதம் சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். இந்த கலவை சாதத்தை செஞ்சு அது கூட உருளைக்கிழங்கு வறுவல் அந்த மாதிரி ஏதாவது ஒரு சைட் டிஷ் வைத்து சாப்பிட்டால் போதும் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் எப்பவும் ஒரே மாதிரியான கலவை சாதங்கள் செஞ்சு சாப்பிடாம ஒரு தடவை கொஞ்சம் வித்தியாசமா இந்த எள்ஷசாதத்தை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லோருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்ப வாங்க இந்த சுவையான ரொம்ப சிம்பிளான ஒரு கலவை சாதமான எள் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான எள்ளு மட்டன் குழம்பு எப்படி வைப்பது? உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா?
Ingredients
Method
முதலில் 4 டேபிள் ஸ்பூன் அளவு எள்ளை கடாயில் சேர்த்து பிறகு உளுந்தம் பருப்பு பெருங்காயம் அனைத்தையும் சேர்த்து வறுத்து அரைத்து கொள்ளவும்.
ஒரு கப் அரிசியை தண்ணீரில் சேர்த்து வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.
வேகவைத்து வடித்து வைத்துள்ள சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து பிறகு தேவையான அளவு உப்பு வறுத்த எள் பொடி அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால் சுவையான எள் சாதம் தயார்.






