Advertisement
அசைவம்

ஈரோடு சிக்கன் சிந்தாமணி செய்வது இவ்வளவு எளிதா ? மிஸ் பண்ணாம நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணுங்க!

Advertisement

வித்தியாசமாக நாக்கிற்கு ருசியை தரக்கூடிய சிக்கனில் வேறு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா. அந்த சமயத்தில் சிக்கன் வைத்து இப்படி ஒரு ஈரோடு சிக்கன் சிந்தாமணி ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இது செய்வது மிக மிக சுலபம்தான். ஆனால் இதன் சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும். சாதாரணமாக ஒரு தயிர் சாதத்தோடு இதை வைத்து சாப்பிடும் போதும் அவ்வளவு நிறைவு கிடைக்கும்.

சிந்தாமணி சிக்கன் என்றாலே ஈரோடு ,கோயம்பத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக்கொள்வது ஊறுகாய், உருளைக்கிழங்கு பொரியல், அதிகமாக சிப்ஸ், ஆனால் ஈரோடு , கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணி செய்வார்களாம். அந்த அளவிற்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லாவகையான உணவிற்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது. அபாரமான ருசியில் சிக்கன் சிந்தாமணி இப்படி செய்து பாருங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisement

ஈரோடு சிக்கன் சிந்தாமணி | Erode Chicken Chindhamani Recipe In Tamil

Print Recipe
சிந்தாமணி சிக்கன் என்றாலே ஈரோடு ,கோயம்பத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக்கொள்வது ஊறுகாய், உருளைக்கிழங்கு பொரியல், அதிகமாக சிப்ஸ், ஆனால் ஈரோடு , கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணி செய்வார்களாம். அந்த அளவிற்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லாவகையான உணவிற்கும் சிறந்த சைடிஷாக
Advertisement
சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது. அபாரமான ருசியில் சிக்கன் சிந்தாமணி இப்படி செய்து பாருங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Erode Chicken Chindhamani
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 658

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 500 கிராம் சிக்கன்
  • 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 கப் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 12 வரமிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு சுவைக்கேற்ப

Instructions

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
     
  • பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, 1/4 கப் நீரை ஊற்றி, வாணலியை மூடி 30 நிமிடம் குறைவான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
  • சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தேங்காயைத் தூவி நன்கு கிளறி, ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஈரோடு சிக்கன் சிந்தாமணி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 658kcal | Carbohydrates: 14g | Protein: 25g | Fat: 8g | Cholesterol: 26mg | Sodium: 18mg | Vitamin A: 3IU
Advertisement
Prem Kumar

Recent Posts

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

3 நிமிடங்கள் ago

ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…

1 மணி நேரம் ago

சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப…

3 மணி நேரங்கள் ago

ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் மற்றும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேர்கிறார்கள். 2024 வது…

4 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு தக்காளி அவல் உப்புமா இப்படி செஞ்சி பாருங்க! அப்புறம் அடிக்கடி செய்வீங்க!

காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 11மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். பயணங்கள் மூலம் சில அனுகூல பலன்களை பெறுவீர்கள். ஒட்டிய பக்தர்கள்…

8 மணி நேரங்கள் ago