- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பொதுவா வத்த குழம்பு கார குழம்பு ரெசிபிஸ் தான் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த வெந்தய குழம்பு ரெசிபியை சிம்பிளா ஒரு தடவை வீட்டில் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த குழம்பு அப்படியே காரக்குழம்பு மாதிரி தான் இருக்கும் ஆனா இதுக்கு நம்ம வெங்காயம் தக்காளி அரைச்சு சேர்க்கப்போறோம். வெங்காயம் வெள்ளைப்பூண்டு மட்டும் உரிச்சிட்டோம் அப்படின்னா டக்குனு இந்த குழம்பு செஞ்சுடலாம். இந்த குழம்பு செய்வதற்கு நமக்கு குறைவான நேரம் தான் தேவைப்படும் இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட சூப்பரா இருக்கும். சுடசுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடும் போது டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும்.
இந்த சுவையான ரெசிபியை ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க. கண்டிப்பா வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா காரக்குழம்பு செய்யும்போது வெங்காயம் தக்காளி வதக்கி செஞ்சு போரடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு தடவை வெங்காயம் தக்காளி வதக்கி அரைச்சு செஞ்சு பாருங்க இதுக்கு வீட்ல இருக்க கூடிய குழம்பு மிளகாய்த்தூள் மட்டுமே போதுமானது. அவ்ளோ சூப்பரா இருக்கும் இது கூட கேரட் பீன்ஸ் பொரியல் கீரை பொரியல் கீரை கூட்டு இது எல்லாமே சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.
இந்த டேஸ்டான ரெசிபியை ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. குழந்தைகளுக்கு கொடுக்குற லஞ்ச் பாக்ஸ்ல சாதம் போட்டு இந்த வெந்தய குழம்பு ஊத்தி நல்லா கிளறி கொடுத்து விட்டீங்கன்னா கண்டிப்பா கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிட்டு வருவாங்க. இந்த வெந்தய குழம்பு கூட ஆம்லெட் செஞ்சு அதை சைடு டிஷ் ஆகவும் வைத்து சாப்பிடலாம். டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த சுவையான வெந்தய குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான வெந்தயக்கீரை சப்பாத்தி ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள்! 2 சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் பத்து சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த விழுதையும் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு புளி கரைசல் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி நன்றாக வேக வைத்து இறக்கினால் சுவையான வெந்தய குழம்பு தயார்.






