- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
சப்பாத்தி, இன்று பலராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும், உடல் நலன் சார்ந்த பல பிரச்னைகளின் போதும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவாகவும் இவை உள்ளன. இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் சற்று வித்தியாசமான சப்பாத்தி சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை வெறும் சப்பாத்தியை செய்வதற்கு பதிலாக சுவையான மற்றும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை சப்பாத்தியை செய்யுங்கள்.
நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வெந்தயக்கீரை சப்பாத்தியை தயிர் மற்றும் ஊறுகாயுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். பச்சை இலை காய்கறிகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் கீரை வகைகளில் எண்ணிலடங்காத விட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு அதிகளவான கலோரிகளை வழங்கி கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது.
மருந்து கசப்பாகத்தான் இருக்கும். அதேபோல்தான் வெந்தயமும், வெந்தயக் கீரையும். மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயக் கீரையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், உடல் சூடு குறையும், மலச்சிக்கல் பிரச்னை குறையும், ரத்தத்தை சுத்தமாக்க உதவும், தோல் நோய்களின் தீவிரம் குறையும், வாயு கோளாறு சரியாகும். இத்தனை நன்மைகளை தரும் இந்த கீரையில் சப்பாத்தி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். இந்த வெந்தயக்கீரை சப்பாத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு வேலைக்கு செல்வோர் காலையில் செய்து சாப்பிட ஏதுவாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!
Ingredients
Method
முதலில் வெந்தயக்கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் கோதுமை மாவை சலித்து அதனுடன் வெந்தயக் கீரை, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன்பிறகு தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, ஓமம் சேர்த்து கலந்து சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு பிசையவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். இதை 20 நிமிடங்கள் மூடி வைத்து விடவும்.
பிறகு சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் வைத்து தேய்த்து கொள்ளவும்.
ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சப்பாத்தியை போட்டு சிறிதளவு நெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்.






