- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
நம்முடைய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக இட்லி உள்ளது. இந்த அற்புதமான இட்லியில் பல வகைகள் உள்ளன. இதில் சில வகைகள் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. சிலவற்றை நாம் விரும்புவதில்லை. பெரும்பாலும் காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்று அவசர அவசரமாக நடைபெறும் காலை வேலைக்கு இடையே ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது கேள்விக்குறியாகவே மாறிவிட்டது. முந்தைய நாள் இரவே காலை வேலைக்கு தேவையான சில முன்னேற்பாடுகளை செய்து விட்டால் போதும், காலையில் எந்த பரபரப்பும் இன்றி பொறுமையாக சமைக்கலாம், ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாக பிங்கர் மசாலா இட்லி பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.
மசாலா இட்லி என்றதும் ஒரு ‘காம்ப்ளிகேட்’ ஆன ரெசிபி என்று நினைத்துவிட வேண்டாம்; இது சாதாரணமாக வீட்டில் நீங்கள் செய்யும் இட்லிகளுக்கு கூடுதல் சுவையை சேர்க்கும் ஒரு சிம்பிள் ஆன ரெசிபி ஆகும். பொதுவாகவே இட்லி மிகவும் ‘டேஸ்டி’ ஆன ஒரு உணவாகும்; அதில் கூடுதல் சுவையை சேர்த்தால் சொல்லவா வேண்டும்! இந்த இட்லி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், செய்வது சுலபமாக இருக்கும். முக்கியமாக, இந்த பிங்கர் மசாலா இட்லியை குழந்தைகள் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் ஒரு முறை செய்து கொடுத்தால் அடிக்கடி கேட்பார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். சரி இந்த பதிவில் பிங்கர் மசாலா இட்லி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் இட்லி மாவு இருந்தால் அதில் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த பீட்ரூட் கார பணியாரம் செய்து சுவைத்து பாருங்கள்!!!
Ingredients
Method
முதலில் இட்லி மாவில் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
பின் அதில் தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும். இவை நன்கு ஆறியதும் இதனை இட்லி மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இட்லி தட்டில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின் இட்லியை நீள வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பிங்கர் இட்லி தயார்.






