- Prep
- 15 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- LUNCH
அசைவப் பிரியர்களாக இருந்தால், சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, இவைகளை விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த வரிசையில், உங்கள் வீட்டில் மீன் உருண்டை கோலா உருண்டையை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுட சுட சாதத்துடன் இதை மீன் கோலா உருண்டை குடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வித்தியாசமாகவும் இருக்கும். சுவையாகவும் இருக்கும். சுவையான, சுலபமான, எ மீன் உருண்டை குழம்பு எப்படி செய்வது
Ingredients
Method
சதைப் பற்றுள்ள அரை கிலோ மீனை வேகவைத்து தோல், முள் நீக்கி உதிர்த்து வைக்க வேண்டும்.
இப்படி உதிர்த்து வைத்துள்ள மீனை மிக்சியில் அரைத்து சிறு உருண் டைகளாக உருட்டி ரொட்டித் துண்டுகளில் பிரட்டி சூடான எண்ணையில் பொரித்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் 4 டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, பொடியாக நறுக்கிய 2 வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, 4 பல் துண்டு, இரண்டும் அரைத்த விழுது போட்டு வதக்கி, தோல் எடுத்து பொடியாக நறுக்கிய 3 தக்காளி சேர்த்து வதக்கவும்.
நெய் மேலே மிதக்கும்போது சுடுதண்ணீர் ஒரு கப் விட்டு அது கொதிக்கும்போது பொரித்து வைத்துள்ள மீன் உருண்டைகள், கரம் மசாலா, சீரகம் போட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும்.
நெய் மேலே மிதக்கும்போது கால் டம்ளர் பால், கொஞ்சம், குங்குமப்பூ போட்டு 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
இறக்கி கிரீம், கொத்தமல்லித் தழையால் அலங்கரித்து பரிமாறவும். அரைத்த முந்திரி பருப்பு விழுது அரைகப், சேர்த்துக் கொண்டால் கிரேவி நல்ல மணத்தோடும் மலாய் ஜோப்தா போல அதிக ருசியாகவும் இருக்கும்.






