அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது. மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். ஆனால் மீன் குருமா இப்படி ஒருமுறை செய்து பாருங்க , அசத்தலான மற்றும் வித்யாசமான சுவையில் இருக்கும். இப்படி ஒரு மசாலா சுவை நிறைந்த மீன் குருமா இதுவரைக்கும் நீங்க சுவைத்திருக்க வாய்ப்பே இருக்காது. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
மீன் குருமா | Fish Kuruma Recipe In Tamil
மீன்குருமா இப்படி ஒருமுறை செய்து பாருங்க , அசத்தலான மற்றும் வித்யாசமான சுவையில் இருக்கும். இப்படி ஒரு மசாலா சுவை நிறைந்த மீன் குருமா இதுவரைக்கும் நீங்க சுவைத்திருக்க வாய்ப்பே இருக்காது. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
Yield: 4 people
Calories: 240kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 500 கிராம் மீன்
- 4 துண்டு தேங்காய்
- 5 பச்சை மிளகாய்
- 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
- 4 தேக்கரண்டி கசகசா
- 3 தேக்கரண்டி உப்பு
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி சோம்பு
- 5 பல் பூண்டு
- இஞ்சி சிறு துண்டு
- 60 கிராம் வெங்காயம்
- பட்டை ஒரு துண்டு
- 3 கிராம்பு
- 50 கிராம் எண்ணெய்
செய்முறை
- மீனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கழுவிக் கொள்ளவும். தேங்காயையும், கசகசாவையும் நீர்விட்டு விழுதாக அரைக்கவும்.
- பச்சைமிளகாயை வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றைச் சிறிது நீர் விட்டு நசுக்கிக் கொள்ள வேண்டும்.
- வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும். அரைத்த தேங்காய், கசகசா விழுது, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு ஆழாக்கு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததம், வெங்காயம், நசுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு மசாலா, அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும்.
- வெங்காயம் சிவந்து மணம் வந்தவுடன் கரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் ஊற்றி மூடி விட வேண்டும்.
- 15 நிமிடங்கள்கொதித்த பிறகு மூடியை அகற்றி, சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை அதில் போட்டு, மீன் வெந்ததும் குருமாவை இறக்கி விட வேண்டும்.
Nutrition
Serving: 200g | Calories: 240kcal | Carbohydrates: 11g | Protein: 29g | Fat: 9g | Cholesterol: 100mg | Sodium: 380mg