Advertisement
சைவம்

பருப்பு இல்லாமல் ருசியான பொட்டுக்கடலை சாம்பார் இப்படி செய்து பாருங்க! அவசர நேரத்தில் கை கொடுக்கும்!

Advertisement

சாம்பார் என்றாலே பருப்பு தான் நம் நினைவுக்கு முதலில் வரும். எந்த பருப்பு வகைகளையும் சேர்க்காமல், சட்டுனு பத்து நிமிடத்தில் மணக்க மணக்க, அருமையான டிபன் சாம்பார் இப்படி செஞ்சு கொடுத்தா, இன்னும் ரெண்டு இட்லி தாராளமாக உள்ளே செல்லும். அட இட்லிக்கு இப்படி கூட பொட்டுக்கடலை அரைத்து ஊற்றி சாம்பார் வைக்கலாமா? இவ்வளவு ஈஸியா, இவ்வளவு சுவையா யாராலும் டிபன் சாம்பார் வைக்கவே முடியாது. வேற லெவல் இட்லி சாம்பார் ரெசிபி இதோ உங்களுக்காக.

பருப்பு வேகவைத்து சாம்பார் வைக்க முடியாத சமயத்தில், இப்படி ஒரு பொட்டுக்கடலை சாம்பாரை முயற்சி செய்யலாம். அல்லது பருப்பு சாம்பார் சாப்பிட்டு போர் அடிக்குது. கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சைடு டிஷ் செய்தால் சூப்பராக இருக்கும் என்று நினைக்கும் போதும் இந்த சாம்பார் ரெசிபி ட்ரை பண்ணலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட இது சூப்பரான ஒரு சைடு டிஷ். சுலபமாக செய்யக்கூடிய சைட் டிஷ்ம் கூட. .

Advertisement

சுட சுட இட்லிக்கு மேல் வார்த்து சாப்பிட ஒரு டிபன் சாம்பார் வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. சாம்பாரின் சுவை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு வீட்டில் இருப்பவர்கள் இட்லியை விருப்பமாக சாப்பிடுவார்கள். இட்லி சாம்பார் என்றாலே அது வேற லெவல் டேஸ்டில் இருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் இட்லி செய்தால் ஒருமுறை இப்படி பொட்டுக்கடலை சாம்பார் வைத்து பாருங்கள். இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். ஒரே மாதிரி சாம்பார் வைத்து போர் அடிக்கும்போது கொஞ்சம் வித்தியாசமாக ட்ரை பண்ணலாம் என்று யோசித்தால் இந்த சாம்பார் ரெசிபியை முயற்சி செய்து பார்க்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பொட்டுக்கடலை சாம்பார் | Fried Gram Sambar In Tamil

Advertisement
Print Recipe
சுட சுட இட்லிக்கு மேல் வார்த்து சாப்பிட ஒரு டிபன் சாம்பார் வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.சாம்பாரின் சுவை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு வீட்டில் இருப்பவர்கள் இட்லியைவிருப்பமாக சாப்பிடுவார்கள். இட்லி சாம்பார் என்றாலே அது வேற லெவல் டேஸ்டில் இருக்கவேண்டும். உங்களுடைய
Advertisement
வீட்டில் இட்லி செய்தால் ஒருமுறை இப்படி பொட்டுக்கடலை சாம்பார்வைத்து பாருங்கள். இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். ஒரே மாதிரி சாம்பார் வைத்துபோர் அடிக்கும்போது கொஞ்சம் வித்தியாசமாக ட்ரை பண்ணலாம் என்று யோசித்தால் இந்த சாம்பார்ரெசிபியை முயற்சி செய்து பார்க்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Breakfast, Kulambu
Cuisine tamil nadu
Keyword Fried Gram Sambar
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 130

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கப் பொட்டுக்கடலை
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சத்தூள்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி தழை

Instructions

  • பொட்டுக்கடலை அரை கப் எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி இதனுடன் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொஞ்சமாக நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • அதன்பிறகு அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்ததை கொதிக்கும் கலவையுடன் சேர்த்து சிறிது நேரம் கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும்..
  • சுவையான பொட்டுக்கடலை சாம்பார் தயார்
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்றது.

Nutrition

Serving: 600g | Calories: 130kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Potassium: 412mg | Fiber: 10g | Sugar: 0.7g
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

8 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

9 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

10 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

11 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

14 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

14 மணி நேரங்கள் ago