- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் பூண்டு, மிளகு இருந்தால் அதை வைத்து ஒரு சாதம் செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று பூண்டு சாதம், மிளகு சாதம் என்று தனித்தனியாக செய்யாமல் காரசாரமாக இரண்டு சேர்த்து செய்யுங்கள். தினமும் ஒரே மாதிரியான உணவை உண்பதற்குப் பதிலாக, நறுமணமும் ஆரோக்கியமும் நிறைந்த இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்து பாருங்கள்.
இது எப்பவும் செய்கின்ற சாதத்திற்கு ஒரு சிறந்த மாற்றாகும். பூண்டு மற்றும் மிளகு இரண்டிலும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அலுவலகம் செல்லும் பணியாளர்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் மிக விரைவாகவும், சுவையாகவும் செய்து கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த லஞ்ச் பாக்ஸ் உணவு இதுவாகும். இதுவரை தேங்காய் சாதம், தக்காளி சாதம், தேங்காய் பால் சாதம், கீரை சாதம், தயிர் சாதம் இதெல்லாம் செய்து சாப்பிட்டிருப்பீர்கள் அதனால் பூண்டு மிளகு சாதம் ஒரு தடவை செய்து பாருங்கள் கண்டிப்பாக அவ்வளோ டேஸ்டாக இருக்கும்.
குழந்தைகளின் மதிய உணவிற்கு இதனை செய்து கொடுத்து விட்டால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவார்கள் அந்த அளவுக்கு இந்த சாதம் செம டேஸ்டாக இருக்கும். இந்த சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக அப்பளம் மட்டும் பொரித்தால் போதும் வேற எதுவுமே பெருசா தேவைப்படாது. வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான பூண்டு மிளகு சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : உருளை கிழங்கு சாதம் செய்வது எப்படி
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலந்து வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பூண்டு மிளகு சாதம் தயார்.






