Advertisement
சைவம்

ருசியான பூண்டு ஊறுகாய் ஒன்று மட்டும் வீட்டில் இருந்தால் போதும்! சைடிஷ் இல்லாத நேரத்திலும் இதனை சைடிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம் !

Advertisement

பூண்டு ஊறுகாய் ஒன்று இருந்தால் போதும் சைடிஷ் இல்லாத நேரத்திலும் இதனை வைத்து சாப்பிட்டு முடிக்க முடியும். அவ்வாறு ஊறுகாய் பிரியர்கள் பல கோடி பேர் இருக்கின்றனர். கல்யாண பந்தியிலும், ஓட்டல்களிலும் சாப்பாடு பரிமாறும் பொழுது அத்ல் இந்த ஊறுகாயும் ஒரு டிஷ்ஷாக இருக்கும். இதனை எந்த வித உணவுடன் வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையான சுவையில் இருக்கும்.

ஊறுகாயில் இஞ்சி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், தக்காளி ஊறுகாய், வத்தல் ஊறுகாய் என பலவித ஊறுகாய்கள் இருந்தாலும், இந்த பூண்டு ஊறுகாயின் சுவையை தான் பலரும் விரும்புகின்றனர். இதன் சுவைக்கு இன்னும் கொஞ்சம் சாதம் வேண்டும் என்று கேட்கத் தோன்றும் அளவிற்கு இருக்கும்.

Advertisement

வீட்டில் சமைக்கும் உணவுகளில் 90% அனைத்திலுமே சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் பூண்டு. ஏனென்றால் பூண்டில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கின்றன. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்ட பூண்டு, நமக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. வைட்டமின் சி நிறைந்த, பூண்டு காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. எனவே சிறிதளவாவது பூண்டினை நமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். அவ்வாறு வாய்வுக் கோளாறு, ஜீரணப் பிரச்சனை, இரும்புச்சத்து குறைபாடு போன்றவற்றை சரி செய்யும் வல்லமை இந்த பூண்டிற்கு இருக்கிறது.

பூண்டை சமையலில் சேர்த்தால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடமாட்டார்கள். அவற்றைத் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். எனவே பூண்டை அரைத்து சற்று புளிப்புச் சுவையுடன் பூண்டு ஊறுகாய் செய்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த பூண்டு ஊறுகாயை எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பூண்டு ஊறுகாய் | Garlic Pickle Recipe In Tamil

Advertisement
Print Recipe
பூண்டு ஊறுகாய் ஒன்று இருந்தால் போதும் சைடிஷ்இல்லாத நேரத்திலும் இதனை வைத்து சாப்பிட்டு முடிக்க முடியும். அவ்வாறு ஊறுகாய் பிரியர்கள்பல கோடி பேர் இருக்கின்றனர். கல்யாண பந்தியிலும், ஓட்டல்களிலும் சாப்பாடு பரிமாறும்பொழுது அத்ல் இந்த ஊறுகாயும் ஒரு டிஷ்ஷாக இருக்கும். இதனை
Advertisement
எந்த வித உணவுடன் வேண்டுமானாலும்தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையான சுவையில் இருக்கும்.. வாருங்கள் இந்த பூண்டு ஊறுகாயை எப்படி சுலபமாகவீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course Side Dish
Cuisine tamil nadu
Keyword Garlic pickle
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 48

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 150 கிராம் பூண்டு
  • 6 பச்சை மிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 1/2 மேசைக்கரண்டி பூண்டு விழுது
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 3 வரமிளகாய்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 4 தேக்கரண்டி எண்ணெய்
  • உப்பு தேவையானஅளவு

Instructions

  • வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தோலுரித்து நறுக்கி வைக்கவும். இரண்டாக பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.
     
  • பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
  • அத்துடன் வறுத்து பொடித்த தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்க்கவும், அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு சுருள வதக்கவும்.
  • பிறகு பூண்டு விழுதைச் சேர்க்கவும். அத்துடன் புளிக்கரைசல் மற்றும் வினிகரை ஊற்றி பூண்டு வேகும் வரை சுருள வேகவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.
  • காரசாரமான பூண்டு ஊறுகாய் தயார்

Nutrition

Serving: 500g | Calories: 48kcal | Carbohydrates: 3.9g | Protein: 4.9g | Fat: 0.2g | Potassium: 0.2mg | Fiber: 1.2g
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

43 நிமிடங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

10 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

10 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

12 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

16 மணி நேரங்கள் ago