- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
நல்ல காரசாரமா சாப்பிடுவதற்கு பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த பூண்டு கார சோறு ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப சோம்பேறித்தனமா இருக்கு என்ன செய்றதுன்னே தெரியல அப்படின்னா யோசிக்காம இந்த பூண்டு கார சோறு செஞ்சிருங்க. இது செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரங்கள் மட்டுமே தேவைப்படும். இதுகூட அப்பளம் மட்டும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டாலே போதும் செம்ம சூப்பரா இருக்கும். காலையில் லேட்டா எழுந்துட்டீங்க குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு என்ன செஞ்சு கொடுக்கிறது என்று தெரியலையா ?எப்பவுமே ஒரே மாதிரியான லெமன் சாதம் தயிர்சாதம்னு செய்யாம இந்த சூப்பரான பூண்டு கார சோறு ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகளுக்கு கொடுக்கும்போது மட்டும் காரம் கொஞ்சம் கம்மியா போட்டுக்கோங்க. இத மட்டும் செஞ்சு கொடுங்க கண்டிப்பாக குழந்தைங்களோட டிபன் பாக்ஸ் காலியாகி தான் வீட்டுக்கு வரும். வேலைக்கு போறவங்க காலேஜுக்கு போறவங்கன்னு எல்லாருமே இத டிபன் பாக்ஸ்க்கு கொண்டு போகலாம். ஒரு தடவ செஞ்சா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான பூண்டு கார சோறு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான பூண்டு மசாலா தோசை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இரண்டு தோசைகள் அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை கடலைப்பருப்பு வேர்க்கடலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் பூண்டை இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
மிளகாய் தூள் குழம்பு மிளகாய் தூள் தனியா தூள் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி பூண்டு வெந்து வந்தவுடன் சாதத்தை போட்டு கிளறவும்.
இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பூண்டு கார சோறு தயார்.






