காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறவங்க இந்த மாதிரி ஒரு தடவை பூண்டு தொக்கு செஞ்சு எடுத்துட்டு போய்ட்டீங்கனா சுட சுட சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிட்டுக்கலாம். ஒரு சில ஹாஸ்டல்ல உணவு நல்லாவே இருக்காது. அப்படி இருக்கிறவங்க சாதம் மட்டும் எடுத்து அதுல இந்த பூண்டு தொக்கு போட்டு சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும். ஹாஸ்டல்ல இருந்தா கூட உங்களுக்கு வீட்ல இருக்குற மாதிரியே ஒரு உணர்வு இருக்கும். அந்த அளவுக்கு இந்த பூண்டு தொக்கு ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.
இந்த பூண்டு தொக்கு ரெசிபியை ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அது மூணு மாசம் வரைக்கும் அப்படியே வச்சுக்கலாம். இதுல மிதக்க மிதக்க நல்லெண்ணெய் ஊத்தி செய்றதால உடம்புக்கு ஆரோக்கியம் அதே சமயத்துல கெட்டுப் போகாமையும் இருக்கும். இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு உங்க ஹாஸ்டலுக்கு எடுத்துட்டு போங்க. கண்டிப்பா இதோட டேஸ்ட் உங்க பிரெண்ட்ஸ்களுக்கும் ரொம்ப பிடிக்கும். எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவீங்க.
இதுகூட கடையில வாங்கின மிச்சர் காரச்சேவு இந்த மாதிரி இருந்துச்சுன்னா வீட்ல இருக்குற மாதிரியே உங்களுக்கு ஜாலியா இருக்கும். நீங்களும் நல்லா சாப்பிடுவீங்க. பிரிட்ஜில நான் கூட பரவால்ல இதை ஒரு மாசம் வரைக்கும் அப்படியே வச்சு சாப்பிடலாம் கை மட்டும் வைக்காம ஈரம் இல்லாத கரண்டி யூஸ் பண்ணி தொக்கு எடுத்து போட்டு சாப்பிடலாம். இந்த தொக்கு சாப்பிடுவதால் வாயு பிரச்சனை சரியாகும். இதுல நிறைய பூண்டுகளை அரைச்சு செய்கிறோம். நிறைய துண்டுகளை வதக்கி சேர்க்கிறோம். அதனால ஒரு தொக்கு கன்சிஸ்டன்சில பாக்குறதுக்கு நாக்குல எச்சில் ஊறும்.
வீட்ல குழம்பு வைக்கிறதுக்கு போரடிச்சு நா இத செஞ்சு வச்சுக்கோங்க சோம்பேறித்தனமா இருக்கும் போது இத போட்டு பிரட்டி சாப்பிடுங்க. சைடிஸ் கூட தேவைப்படாது. சாப்பிட சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். இந்த ருசியான சுவையான ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுத்த நீங்களும் சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க. இப்ப வாங்க இந்த பூண்டு தொக்கு ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
பூண்டு தொக்கு | Garlic Thokku Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 200 கி பூண்டு
- 50 கி புளி
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் சர்க்கரை
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- 100 கிராம் பூண்டை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து நார் நீக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் மீதி உள்ள 100 கிராம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- அரைத்து வைத்த புளி விழுது மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க வைக்கவும்.
- சர்க்கரை சேர்த்து எண்ணெய் பிரிந்து நன்றாக வெந்து வந்ததும் இறக்கினால் சுவையான பூண்டு தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமாக கடப்பா பூண்டு பொடி இப்படி செய்தால் இட்லி, தோசை, சாதம் எது கூட வேண்டுமானாலும் சாப்பிடலாம்!