Advertisement
சைவம்

தாறுமாறான சுவையில் நெய் பிரியாணி செய்வது எப்படி ?

Advertisement

யாரிடம் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டாலும் பெரும்பாலான நபர்கள் பிரியாணி இன்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நம் ஊரில் பிரியாணி பிரியர்கள் அதிகமாக உள்ளனர். ஆகையால் இன்று நெய் பிரியாணி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இப்படி நீங்கள் இந்த முறையில் நெய் பிரியாணி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால்..

இதையும் படியுங்கள் : மெட்ரஸ் பிரியாணி கத்தரிக்காய் ரெசிபி செய்வது எப்படி ?

Advertisement

உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தப் போகி எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் இனி இந்த பிரியாணியை அடிக்கடி செய்து தர சொல்லுவார்கள். அதனால் இன்று இந்த நெய் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நெய் பிரியாணி | Ghee Biriyani Recipe in Tamil

Print Recipe
இன்று நெய் பிரியாணி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இப்படி நீங்கள் இந்த முறையில் நெய் பிரியாணி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தப் போகி எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் இனி இந்த பிரியாணியை அடிக்கடி செய்து தர சொல்லுவார்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Biriyani, பிரியாணி
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 210

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 2 கப் பாஸ்மதி அரிசி
  • 3 பெரிய வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது
  • 4 பச்சை மிளகாய் கீறியது
  • ½ கப் தேங்காய் பால்
  • 1 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 tsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 பிரியாணி இலை
  • 3 tbsp எண்ணெய்
  • 2 tbsp நெய்
  • 10 முந்திரி பருப்பு

பொடி அரைக்க

  • 1 துண்டு பட்டை
  • 2 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 1 வர மிளகாய்
  • 1 tsp மல்லி

Instructions

  • முதலில் பெரிய வெங்காயத்தை நீள்வாக்கில் நறுக்கவும், பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும், புதினா மற்றும் கொத்தமல்லி இலையை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, லவங்கம், ஏலக்காயை, வரமிளகாய் மற்றும் மல்லி சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை
    Advertisement
    அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி நெய் உருகி காய்ந்ததும் அதில் பத்து முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
  • பின் குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை, அரைத்த பொடி மற்றும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • பின்பு நீள்வாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்
  • நாம் சேர்த்த அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் தேங்காய்பால் மற்றும் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
  • பின் பாஸ்மதி அரிசி மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும். பின் தீயை மிதமாக ஏறிய விட்டு ஒரு பத்து நிமிடங்கள் வேக வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு சுவையான நெய் பிரியாணி தயார்.

Nutrition

Serving: 950gram | Calories: 210kcal | Carbohydrates: 78g | Protein: 13g | Fat: 2.6g | Saturated Fat: 0.3g | Cholesterol: 10mg | Sodium: 5mg | Potassium: 382mg | Fiber: 8g | Sugar: 0.5g | Vitamin A: 4.7IU | Calcium: 8mg | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

55 நிமிடங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

57 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

4 மணி நேரங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

13 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

14 மணி நேரங்கள் ago

ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு…

14 மணி நேரங்கள் ago