நெய் தோசையை 5 நிமிடத்தில் நம்முடைய வீட்டிலும் செய்யலாம் வாங்க. நெய் தோசையை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். தென்னிந்திய உணவு வகைகளையே முக்கியமானது என்று சொல்லப் போனால் இந்த இட்லியும் தோசையும் தான். இது
இதையும் படியுங்கள் : ருசியான கேரளா தேங்காய் தோசை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
இல்லாத வீடே இருக்காது. அதிலும் இட்லியை விட தோசை என்றால் கொஞ்சம் அதிகமாக விருப்பமாக சாப்பிடுவார்கள். அதிலும் நெய் தோளை என்றல் இன்னும் விருப்பமாக சாப்பிடுவர் . நல்ல ஹெல்தியான அதே நேரத்தில் மொறு மொறுன்னு சூப்பரான தோசையை ரெசிபி எப்படி செய்யறன்னு பார்க்கலாம்.
நெய் தோசை | Ghee Roast Dosa Recipe in Tamil
நெய் தோசையை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். தென்னிந்திய உணவு வகைகளையே முக்கியமானது என்று சொல்லப் போனால் இந்த இட்லியும் தோசையும் தான். இது இல்லாத வீடே இருக்காது. அதிலும் இட்லியை விட தோசை என்றால் கொஞ்சம் அதிகமாக விருப்பமாக சாப்பிடுவார்கள். அதிலும் நெய் தோளை என்றல் இன்னும் விருப்பமாக சாப்பிடுவர் . நல்ல ஹெல்தியான அதே நேரத்தில் மொறு மொறுன்னு சூப்பரான தோசையை ரெசிபி எப்படி செய்யறன்னு பார்க்கலாம்.
Yield: 4 People
Calories: 110kcal
Equipment
- 1 கிரைண்டர் (அ) மிக்ஸி
- 1 தோசைக்கல்
- 2 அகல பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 1/2 KG புழுங்கல் அரிசி
- 200 கிராம் பச்சரிசி
- 150 கிராம் உளுந்து
- 2 Tsp வெந்தயம்
- எண்ணெய் தேவைகேற்ப
- நெய் தேவைகேற்ப
- உப்பு தேயைான அளவு
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கும் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மூன்று முறை தண்ணீர் வைத்து தன்கு அலசி கொள்ளவும்.
- பின் அலசிய பொருட்களை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து கொள்ளவும். பின் ஓவ்வொரு பொருளாக மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும்.
- அதன் பின் தனிதனியாக அரைத்த மாவை ஒன்றாகக் கலந்து இதனுஞன் தேவையான அளவு உப்பு போட்டு குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் வரை நன்கு புளிக்க விடவும். ( இரவு மாவாட்டி காலை வரை புளிக்க வைக்கலாம் )
- அதன் பின் மாவு புளித்தவுடன் தோசைக் கல்லை சூடாக்கி , எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி மாவு எடுத்து, மெல்லியதாக வார்க்கவும். தோசையைச் சுற்றிலும் எண்ணெய் விடவும்.
- பின்பு இரு பக்கமு் தோசை பொன்னிறமாக வெந்தவுடன், தோசையில் தேவையான அளவு நெய் விட்டு மடித்து சூடாக பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான நெய் தோசை ரெடி.
Nutrition
Serving: 800Gram | Calories: 110kcal | Carbohydrates: 89g | Protein: 13g | Fat: 1g | Fiber: 8g | Sugar: 0.5g | Iron: 1.1mg