- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
என்னதான் எல்லாரும் வீட்ல பிரஷ்ஷா செஞ்சு சாப்பிட்டாலுமே சில சமயங்களில் ஒரு சில தொக்கு ஊறுகாய் பொடி எல்லாமே செஞ்சு ஒரு மூணு மாசம் ஆறு மாசம் வரைக்கும் ஸ்டோர் பண்ணி சாப்பிடலாம். அந்த மாதிரி நீங்க ஒரு வாரத்துக்கு மேல ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிடக்கூடிய வெங்காயம் தக்காளியே இல்லாத ஒரு சூப்பரான இஞ்சி துவையல் இதே மாதிரி செஞ்சு பாருங்க. கண்டிப்பா உங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த இஞ்சி துவையல சுடச்சுட சாதத்துக்கும் இட்லி தோசை சாப்பிடலாம் அவ்வளவு சூப்பரா இருக்கும். சளி இருமல் தொந்தரவு இருக்கிறவங்க இந்த இஞ்சி துவையல் செஞ்சு அடிக்கடி சாப்பிட்டா கண்டிப்பா சளி இருமல் குறையும் டேஸ்டும் ரொம்ப சூப்பரா இருக்கும்.
இந்த இஞ்சி துவையல் பழைய சாதத்துக்கும் கூட ஒரு சூப்பரான காம்பினேஷன் அது மட்டும் இல்லாம தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் போன்ற சாதங்களுக்கும் கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். எதுவுமே சமைக்கல அப்படின்னா சுட சுட சாதம் மட்டும் செஞ்சு இந்த இஞ்சி துவையல வச்சு அதுக்கு மேல நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிட்டால் டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் இதுக்கு சைடிஸ் கூட தேவைப்படாது. உங்களுக்கு தேவைப்பட்டால் அப்பளம் வடகம் ஏதாவது பொறிச்சிக்கிட்டாலே போதும். டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இதுல சுட சுட சாதம் போட்டு கிளறி குழந்தைகளுடைய லஞ்ச் பாக்ஸுக்கும் கொடுத்து விடலாம். இந்த டேஸ்டான சுவையான இஞ்சி துவையல் ரெசிபி எப்படி சூப்பரா செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இஞ்சி சட்னி செய்வது எப்படி
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு தனியா விதைகள் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பிறகு காய்ந்த மிளகாய் புளி நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பூண்டு சேர்த்து நன்றாக வதக்கியதும் சீரகம் சேர்த்து வதங்கியதும் உப்பு சேர்த்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு அதில் வெல்லம் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலந்து இறக்கினால் சுவையான இஞ்சி துவையல் தயார்.






