- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பீன்ஸ் நார்ச்சத்து நிறைந்த ஒரு காய்கறி ஆனா இந்த பீன்ஸ அதிகமா யாரும் பயன்படுத்த மாட்டாங்க. பீன்சை பெரும்பாலும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது போடுவாங்க ஃப்ரைட் ரைஸ் செய்யும் போது போடுவாங்க. அதுக்கப்புறம் பீன்ஸ் பொரியல் செய்வாங்க. கேரட்டையும் பீன்ஸையும் சேர்த்து ஒரு சிலர் பொரியல் செய்வாங்க. பீன்ஸ் வச்சு பருப்பு உசிலி கூட ஒரு சிலர் செஞ்சு சாப்பிடுவாங்க ஆனா பீன்ஸ் வச்சு இந்த மாதிரி ஒரு தடவை கிரீன் கிரேவி செஞ்சு பாருங்க.
ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் இதுக்கு நாம ஒரு மசாலா அரைச்சு செய்யப்போறோம். அதனால சுவை கூடுதலாகவே இருக்கும் சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும் சப்பாத்திக்கு இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக வச்சு சாப்பிடலாம். பொதுவா சப்பாத்திக்கு ரொம்பவே அருமையாக இருக்கும் சப்பாத்திக்கு நீங்க வேற ஏதாவது கிரேவி மாதிரி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரு தடவை இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு அருமையாக இருக்கும்.
வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் பீன்ஸ் சாப்பிடாதவங்க கூட இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. இதுல தயிர் சேர்த்து செய்யப் போறதால காரசாரமாக புளிப்பாக சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இந்த டேஸ்ட் ஆன ரெசிபியை கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாருக்குமே செஞ்சி கொடுங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான கிரீன் பீன்ஸ் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சாம்பார் சாதம், ரசம் சாதமுடன் சாப்பிட ருசியான பீன்ஸ் பொரியல் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு புதினா இலைகள் கொத்தமல்லி இலைகள் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்து விழுது மிளகாய் தூள் கரம் மசாலா, மல்லி தூள் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும்.
பீன்ஸை நறுக்கி சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு தயிர் சேர்த்து கலந்து ஐந்து நிமிடத்தில் இறக்கினால் சுவையான கிரீன் பீன்ஸ் கிரேவி தயார்.






