- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
புரட்டாசி மாதத்தில் பொதுவா நிறைய பேரு அசைவம் சாப்பிட மாட்டாங்க அதுக்கு பதிலா வீட்ல காலிபிளவர் காளான் இந்த மாதிரி தான் சாப்பிடுவாங்க. அப்படி இருக்கும்போது காளான் வைத்து விதவிதமா நிறைய ரெசிபி செய்யலாம் அந்த வகையில காளான் வைத்த இந்த மாதிரி ஒரு சூப்பரான பச்சை மிளகாய் காளான் ரெசிபி செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். எப்பவும் காளான் வச்சு ஒரே மாதிரியா தொக்கு பிரியாணி அப்படின்னு செய்யாம ஒரு முறை இந்த மாதிரி காளான் வைத்து பச்சை மிளகாய் காளான் ரெசிபி செஞ்சு பாருங்க.
இந்த ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஞாயிற்றுக்கிழமை அசைவம் எடுக்க முடியாத சூழ்நிலையில இந்த ரெசிபியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இந்த டேஸ்டான பச்சை மிளகாய் காளானுக்கு மிளகாய் தூள் இதெல்லாம் சேர்க்க தேவை இல்லை. பச்சை மிளகாய் காரமே போதுமானது. கடைசியாக கொஞ்சமாக கரம் மசாலா தூவி செய்யும் போது கண்டிப்பாக அசைவ சுவையில் கிடைக்கும்.
ரசம் சாதம் தயிர் சாதம் இது எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்பவே சூப்பரா இருக்கும். கண்டிப்பாக சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பச்சை மிளகாய் அதிக காரமாய் இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம் கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பச்சை மிளகாய் காளான் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கமகமக்கும் ஆரோக்கியமான சுவையான காளான் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் இஞ்சி பூண்டு முந்திரிப்பருப்பு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
காளானை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் அரைத்த விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை ,ஏலக்காய், நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கலந்து வைத்துள்ள காளான் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக வேக வைக்கவும்.
கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து வேக வைத்தால் சுவையான பச்சை மிளகாய் காளான் தயார்.






