- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது. தென்னிந்திய உணவில் ஊறுகாய்க்கு எப்போதுமே இடம் உண்டு. நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் குளிர்காலத்தில் தான் ஊறுகாய் போடும் மாங்காய், எலுமிச்சை பழங்களை காய வைப்பார்கள். அப்போது தான் அது சரியான பதத்தில் பழுத்து வரும். நம் வீடுகளில் அனைத்து உணவுகளுடனும் ஊறுகாய் பரிமாறப்படுகிறது. உணவின் சுவை எப்படி இருந்தாலும் சரி, அதனுடன் ஊறுகாய் இருந்தால் போதும். சுவை பன்மடங்கு அதிகமாகி விடும்.
மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்கிறோம். நீங்கள் இதுவரை எத்தனையோ சிக்கன் ரெசிபிக்களை செய்திருப்பீர்கள். அதேப் போல் எத்தனையோ வகையான ஊறுகாயை சுவைத்திருப்பீர்கள். ஆனால் மிளகாயில் ஊறுகாய் செய்து சாப்பிட்டதுண்டா? இல்லையென்றால் இன்று அந்த ஊறுகாயை செய்து பாருங்கள். அதுவும் இந்த மிளகாய் ஊறுகாய் சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியூர்களில் வேலை செய்பவராயின், உங்கள் அம்மாவிடம் இந்த ஊறுகாயை செய்து கொடுக்கச் சொல்லி சாப்பிடுங்கள்.
நல்ல காரசாரமான இந்த ஊறுகாய் சைடு டிஷ் இல்லாத நாட்களில் நிச்சயம் கைகொடுக்கும். காரம் மற்றும் புளிப்பு சுவையின் கலவையான இந்த மிளகாய் ஊறுகாய் சப்பாத்தி முதல் தயிர் சாதம் வரை பல உணவுகளுக்கு பெஸ்ட் சைடு டிஷ் ஆக இருக்கும். பக்குவமாக வைத்துக் கொண்டால் 6 மாதம் வரை வைத்து ருசிக்கலாம். கடைகளில் வாங்கும் ஊறுகாய்களில் பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இதற்கு பதிலாக சுகாதாரமான முறையில் நாமே வீட்டில் செய்தால் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் பச்சை மிளகாயை நன்கு அலசி விட்டு காம்பு நீக்கி இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இது ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் புளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் புளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இது நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் காரசாரமான பச்சை மிளகாய் ஊறுகாய் தயார். இது தயிர் சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி தோசைக்கு கூட தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.






