- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, snacks
சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே அதிகமான புரோட்டின் சத்துக்கள் தேவைப்படும். முட்டை சுண்டல் வகைகள் பால் இது எல்லாமே தினமும் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக உடம்பில் புரோட்டின் சத்துக்கள் அதிகரிக்கும். ப்ரோட்டின் சத்துக்கள் கிடைக்க மாத்திரை மருந்து சாப்பிட அவசியம் கிடையாது இந்த மாதிரி உணவுலையே எடுத்துக்கலாம். ஆனா குழந்தைகளுக்கு அப்படியே சுண்டல் குடுத்தா கண்டிப்பா சாப்பிட மாட்டாங்க அதனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஒரு ரெசிபி மாதிரி செஞ்சு கொடுக்கணும். அந்த வகையில கருப்பு சுண்டல் வச்சு புளிக்குழம்பு சுண்டல் கூட்டு கொண்டை கடலை கறி இந்த மாதிரி நிறைய ரெசிபீஸ் செஞ்சிருப்பீங்க.
ஆனா ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு குழந்தைகளுக்கு இந்த மாதிரி கிரீன் மசாலா அரைச்சு அதுல சுண்டல் ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா சூப்பரா இருக்கும். இந்த ரெசிபியில் துருவிய மாங்காய் துருவிய கேரட் எல்லாமே சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும் காரசாரமா புளிப்பா வித்தியாசமான சுவையில இருக்கும். இதுக்கு தேங்காய் கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை எல்லாமே சேர்த்து அரைத்து அந்த விழுதை சேர்க்கும்போது வாசனை செம சூப்பரா இருக்கும். இத குழந்தைகளுக்கு காலைல பிரேக் பாஸ்ட்க்கு கொடுக்கலாம்.
இல்ல அப்படின்னா ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு குழந்தைகளுக்கு இதை செஞ்சு வச்சு இருக்கலாம். டீ காபியோட வடை, பஜ்ஜி போண்டாவில் சாப்பிடுவதற்கு பதில இந்த மாதிரி ஒரு ஹெல்தியான ரெசிபியை செஞ்சு கொடுங்க. சுண்டல் வகைகள் இரண்டு இருக்கு வெள்ளை சுண்டல் கருப்பு சுண்டல் இதுல நீங்க எந்த சுண்டல் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கருப்பு சுண்டல் சாப்பிடுவது இன்னுமே உடம்புக்கு ரொம்ப நல்லது. குழந்தைகள் மட்டுமில்லாமல் வீட்ல இருக்குற எல்லாருமே சாப்பிடலாம் இப்ப வாங்க இந்த சுவையான கிரீன் மசாலா சுண்டல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கோவில் ஸ்டைல் சுண்டல் செய்வது எப்படி ?
Ingredients
Method
எட்டு மணி நேரம் ஊற வைத்த சுண்டலை குக்கரில் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் ஒரு கொத்து கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்ததும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு வேக வைத்த சுண்டலை சேர்த்து அரைத்து வைத்த தேங்காய் விழுது துருவிய கேரட் துருவிய மாங்காய் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் சுவையான கிரீன் மசாலா சுண்டல் தயார்.






