- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா, அப்படின்னு நிறைய பக்கோடா ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில இப்ப நம்ம கொஞ்சம் வித்தியாசமா பச்சை பட்டாணி வச்சு ஒரு பக்கோடா செய்ய போறோம். பச்சை பட்டாணி வைத்து பச்சை பட்டாணி புலாவ் செஞ்சுருப்பீங்க பச்சை பட்டாணி வைத்து கிரேவி செஞ்சிருப்பீங்க கட்லெட் கூட செஞ்சுருப்பீங்க. ஆனா இப்ப நம்ம பச்சை பட்டாணி வைத்து கொஞ்சம் வித்தியாசமா பக்கோடா செய்ய போறோம் இந்த பக்கோடா ரெசிபி சாப்பிடறதுக்கு ரொம்பவே ருசியா இருக்கும்.
இந்த டேஸ்டான பக்கோடா ரெசிபியை ஒரு தடவை சாப்பிட்டீங்கன்னா அதுக்கப்புறம் பச்சை பட்டாணி கிடைத்தாலே அதை வைத்து நீங்கள் இந்த பக்கோடா தான் செஞ்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும். இந்த டேஸ்டான பச்சை பட்டாணி பக்கோடாவை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸிதான் ரொம்ப ரொம்ப ஈஸியா சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். இதுகூட பாசிப்பருப்பு ஊறவைத்து சேர்த்து அரைச்சு செய்ய போறோம்.
வாசனைக்காக சோம்பு கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் அனைத்தும் சேர்த்து இந்த சுவையான பச்சை பட்டாணி பக்கோடா ரெசிபி செய்ய போறோம். நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். சாம்பார் சாதம் காரக்குழம்பு சாதம் பருப்பு சாதம் அப்படின்னா எல்லாத்துக்குமே இதனை சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.
ஈவினிங் டீ காபியோட இந்த ரெசிபியை வைத்து சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும். நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கே வித்தியாசமான டேஸ்டில் இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான பச்சை பட்டாணி பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை பட்டாணி சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அதனையும் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் பச்சை மிளகாய், சோம்பு, கருவேப்பிலை இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து பெருங்காயத்தூள் உப்பு நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் அரிசி மாவு கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
அதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பொரித்து எடுத்தால் சுவையான பச்சை பட்டாணி பக்கோடா தயார்.






