Advertisement
காலை உணவு

ருசியான வேர்க்கடலை கோவைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்க! சுடு சோறுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!!

Advertisement

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தான வளரும் கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும். இந்த வேர்க்கடலை கோவைக்காய் மசாலா அட்டகாசமான சுவையில் இருக்கும். கோவக்காயை ஒரு முறை இப்படி சேமித்து பாருங்க.

இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட காளிஃப்ளவர் எக் பொரியல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

கோவக்காய் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த கோவக்காய் மசாலா தாறுமாறாக இருக்கும். இந்த கிரேவி சப்பாத்தி ரொட்டி நான் இவைகளுக்கு தொட்டுக்கொள்ள, சுட சுட வெள்ளை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

வேர்க்கடலை கோவைக்காய் மசாலா | Groundnut Kovakkai Masala

Advertisement
Print Recipe
புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தான வளரும் கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும். இந்த வேர்க்கடலை கோவைக்காய் மசாலா அட்டகாசமான சுவையில் இருக்கும். கோவக்காயை ஒரு முறை இப்படி சேமித்து பாருங்க. கோவக்காய் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த கோவக்காய் மசாலா தாறுமாறாக இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian
Keyword Kovaikai masala
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 21

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கப் கோவைக்காய்
  • 1/2 கப் வேர்க்கடலை
  • 1/4 கப் நறுக்கிய
  • 1/2 டீஸ்பூன் மமிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  • 1/4 டீஸ்பூன் பாவ் பாஜி மசாலா
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு 
  • 1/4 கப் தேங்காய்
  • 1 கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி

Instructions

  • கோவைக்காயை கழுவி, விருப்படி நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின் நறுக்கிய கோவைக்காயை ஆவியில் வேக வைத்து தயாராக வைக்கவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வேர்க்கடலையை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
  • பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், ஆவியில் வெந்த கோவைக்காயை சேர்த்து வதக்கி, மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்க்கவும்.
  • அத்துடன் வறுத்த வேர்க்கடலை மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  • பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பின்னர் தேங்காய் துருவல், நறுக்கிய மல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் கோவைக்காய் வேர்க்கடலை மசாலா பொரியல் தயார்.
  • இப்போது மிக மிக சுவையான, வித்தியாசமான மசாலா சுவையுடன் கோவைக்காய் வேர்க்கடலை மசாலா பொரியல் சுவைக்கத் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 21kcal | Carbohydrates: 3.4g | Protein: 1.4g | Fat: 0.4g | Potassium: 30mg | Fiber: 1.6g | Vitamin C: 14mg | Calcium: 25mg | Iron: 0.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

7 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

8 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

10 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

14 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

14 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

15 மணி நேரங்கள் ago