Advertisement
சைவம்

ஹரியாலி வெஜ் கிரேவி இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க! இனி சாம்பார்லா மறந்துரூவிங்க!

Advertisement

விதவிதமான கிரேவி வகைகளை விட இந்த முறையில் நீங்கள் ஒரு முறை வெஜிடபிள் கிரேவி செய்து பாருங்கள் ரொம்பவே வித்தியாசமான, டேஸ்டியான ஒரு சுவையை கொடுக்கும். ஹோட்டலில் கூட இந்த ஒரு கிரேவி ரெசிபியை நீங்கள் சுவைத்து பார்த்திருக்க மாட்டீர்கள். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இடியாப்பம், சாதம் என்று எல்லாவற்றுக்குமே இந்த கிரேவி அட்டகாசமான காம்பினேஷன் ஆக நிச்சயம் இருக்கும்.

நீங்களும் இந்த எளிமையான மற்றும் அருமையான வெஜிடபிள் கிரேவியை இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க அசத்துங்க. என்னதான் வீடுகளில் வெஜ் கிரேவி வைத்தாலும் ஹோட்டலில் வைக்கப்படும் கிரேவிகளுக்கு தான் இப்போது பலரது நாக்கு அடிமையாகி உள்ளது. ஆகையால் நீங்கள் கவலை பட வேண்டாம் ஹோட்டல் சுவையில் அருமையாக வீட்டிலேயே எப்படி ஹரியாலி வெஜ் கிரேவி செய்வது என்று பார்க்கலாம்.

Advertisement

ஹரியாலி கிரேவி என்பது கொத்தமல்லி மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் கிரேவி ஆகும். இந்த கிரேவி சப்பாத்தி, நாண், புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் இன்று இரவு திடீரென்று சப்பாத்தி மற்றும் வெஜ் கிரேவி கேட்டால், ஹரியாலி வெஜ் கிரேவியை செய்து கொடுத்து அவர்களை அசத்துங்கள்.

ஹரியாலி வெஜ் கிரேவி | Hariyali Veg Gravy Recipe In Tamil

Print Recipe
அருமையான வெஜிடபிள் கிரேவியை இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க அசத்துங்க. என்னதான் வீடுகளில் வெஜ் கிரேவி வைத்தாலும் ஹோட்டலில் வைக்கப்படும் கிரேவிகளுக்கு தான் இப்போது பலரது நாக்கு அடிமையாகி உள்ளது. ஆகையால் நீங்கள் கவலை பட வேண்டாம் ஹோட்டல்சுவையில் அருமையாக வீட்டிலேயே எப்படி ஹரியாலி வெஜ் கிரேவி செய்வது என்று பார்க்கலாம். ஹரியாலி கிரேவி என்பது கொத்தமல்லி மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் கிரேவி ஆகும். இந்த கிரேவி
Advertisement
சப்பாத்தி, நாண், புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் இன்று இரவு திடீரென்று சப்பாத்தி மற்றும் வெஜ் கிரேவி கேட்டால், ஹரியாலி வெஜ் கிரேவியை செய்து கொடுத்து அவர்களை அசத்துங்கள்.
Course Breakfast, dinner
Cuisine Hariyali
Keyword Hariyali Veg Gravy
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 868

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 பெரிய வெங்காயம்
    Advertisement
  • 3 மீடியம் சைஸ் தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கின பூண்டு பற்கள்
  • 3/4 டீஸ்பூன் ம.தூள்
  • 3/4 டீஸ்பூன் தனி மி.தூள்
  • 1 ஸ்பூன் தனியா தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • உப்பு ருசிக்கு

அரைக்க

  • 1 டீஸ்பூன்      சீரகம்
  • 1/2 டீஸ்பூன்      சோம்பு
  • 1/4 கட்டு கொத்தமல்லி தழை
  • 1/4 கப் புளிக்காத தயிர்

தண்ணீர்

  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 டம்ளர் தண்ணீர்

Instructions

  • முதலில் வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், சோம்பு, கொத்தமல்லி தழை, தயிர் சேர்க்கவும். இவை நன்கு வதங்கியதும் ஆற‌விட்டு மையஅரைத்துக் கொள்ளவும்.
     
     
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் போட்டு பொரிந்ததும், பூண்டை நன்கு வறுக்கவும்.
  • அடுத்து இஞ்சி, பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும். பிறகு,வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கியதும், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • அடுப்பைசிறு தீயில் வைத்து, அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பின்,கரம் மசாலா தூள், தண்ணீர் சேர்த்து, கொதித்து கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
  • மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கி, பௌலுக்கு மாற்றவும். இப்போது,வித்தியாசமான, சுவையான, சுலபமான ஹரியாலி வெஜ் கிரேவி தயார். இது சப்பாத்தி, பூரி, நாண், பரோட்டாவிற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 868kcal | Carbohydrates: 43.1g | Fat: 72g | Fiber: 5.5g | Calcium: 123mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

2 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

13 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

18 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

22 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

22 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

24 மணி நேரங்கள் ago