- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, evening
ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு வடை, பஜ்ஜி, போண்டா, சிப்ஸ், கேசரி, ப்ரெஞ்ச் ப்ரைஸ், பிரட் ஆம்லெட் அப்படின்னு எக்கச்சக்கமா நிறைய ஃபாஸ்ட் ஃபுட் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா எப்பவுமே இதே மாதிரியே செஞ்சு சாப்பிடாம அடிக்கடி குழந்தைகளுக்கும் வீட்ல இருக்கறவங்களுக்கும் ஹெல்தியான ஸ்நாக்ஸ் ஏதாவது செஞ்சு கொடுக்கணும். அந்த வகையில இன்னைக்கு நம்ம முளைகட்டுன பாசி பயிறு வைத்து ஒரு சூப்பரான அடை செய்ய போறோம். இந்த அடை ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் இத அடை வடை அப்படின்னு என்ன வேணும்னாலும் சொல்லலாம் ஆனா இத நம்ம எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுக்க போறது கிடையாது அதனால அடை அப்படின்னே சொல்லலாம்.
இந்த அடை ரெசிபி நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியாவே இருக்கும். இதுல நம்ம கடலை மாவு மட்டும் தான் சேர்க்க போறோம். அதுமட்டுமில்லாம உங்களுக்கு தேவையான காய்கறிகள் எல்லாமே இதுல சேர்த்துக்கலாம் நம்ம இப்ப செய்யப்போற இந்த அடை ரெசிப்பில கேரட் மட்டும் துருவி சேர்க்க போறோம் நீங்க தேவைப்பட்டால் முட்டை கோஸ் குடைமிளகாய் அப்படின்னு உங்களுக்கு என்ன காய்கறிகள் பிடிக்குமோ அது சேர்த்து செய்யலாம். காய்கறிகள் முளை கட்டுன பச்சை பயிறு எல்லாமே சேர்த்து செய்றதால நிறைய ஆரோக்கியங்கள் நிறைந்தது. ஸ்கூல் விட்டு வர குழந்தைகளுக்கு இந்த மாதிரி சூப்பரான ஸ்னாக்ஸ் ஹெல்தியா டேஸ்ட்டா செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா குழந்தைகள் எண்ணெயில் வறுத்தது பொரிச்சது இதெல்லாம் கேட்க மாட்டாங்க.
பீட்சா பர்கர் கூட மறந்துடுவாங்க அந்த அளவுக்கு பாரம்பரியமான சில உணவுகளை நம்ம அவங்களுக்கு செஞ்சு கொடுக்கணும். அந்த வகையில இந்த பாசிப்பயிரை ஊற வைத்து முளைகட்டி அதுக்கப்புறம் செய்வது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனாலும் ஹெல்தியான ஸ்நாக்ஸ் அப்படின்றதால கொஞ்சம் கஷ்டப்பட்டு செய்யுறதுல தப்பு கிடையாது. முளைக்கட்டுறது மட்டும்தான் கஷ்டம் மத்தபடி இதை செய்றது ரொம்ப ரொம்ப ஈஸிதான். இதுக்கு தேவையான பொருட்கள் ரொம்ப குறைவான பொருட்கள் அதுவும் வீட்டில் இருக்கிற பொருட்களை வச்சே செய்யலாம். இப்ப வாங்க இந்த சுவையான முளைகட்டின பச்சைப்பயிறு அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைலில் மணமணக்கும் பச்சை பயறு தோசை செய்வது எப்படி ?
Ingredients
Method
பாசிப்பயிறை 8 மணி நேரம் ஊற வைத்து முளைகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி இலைகள் துருவிய கேரட், உப்பு, மிளகாய் தூள் கடலை மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வடை மாவு பதத்திற்கு செய்து கொள்ளவும்.
தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள கலவையிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான அடை தயார்.






