Home ஜூஸ் கோடை வெயிலுக்கு குளு குளுனு செம்பருத்திப்பூ புதினா சர்பத் இப்படி செய்து பாருங்க!!

கோடை வெயிலுக்கு குளு குளுனு செம்பருத்திப்பூ புதினா சர்பத் இப்படி செய்து பாருங்க!!

கோடைகாலம் ஆரமித்துவிட்டது. கோடை வெயில் தாக்கத்தில் இருந்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க அதிகமாக தண்ணீர் பருகுதல், பல ஜூஸ் குடித்தால் போன்ற ஆரோக்கியம் முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், வெயிலுக்கு இதமான செம்பருத்திப்பூ புதினா சர்பத் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம். செம்பருத்திப்பூ புதினா சர்பத் குளிர்ச்சியான, ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை கொண்டு செய்யப்படும் குளிர்பானம்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : கோடை வெயிலை தணிக்க குளிர்ச்சியான, ருசியான கம்பங்கூழ் இப்படி செய்து பாருங்க!

வெயில் அதிகமாக இருப்பதால் கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்கள் மற்றும் பாக்கெட்டுகளில் கிடைக்கும் வண்ணமயமான பொடிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் குளிர்பானம் ஆகியவற்றில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஏராளமாக இருக்கும். அதற்கு பதிலாக இது போன்ற வீட்டிலேயே சுத்தமாக செய்யப்பட்ட , சத்தும் நிறைந்த குளிர்பானங்களை செய்து குடிப்பதால் உடல் ஆரோக்கியமும் மேம்படும் சுவையும் அபாரமாக இருக்கும்.

Print
No ratings yet

செம்பருத்திப்பூ புதினா சர்பத் | Hibiscus Mint Sarbath Recipe in Tamil

கோடைகாலம் ஆரமித்துவிட்டது. கோடை வெயில் தாக்கத்தில் இருந்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க அதிகமாக தண்ணீர் பருகுதல், பல ஜூஸ் குடித்தால் போன்ற ஆரோக்கியம் முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், வெயிலுக்கு இதமான செம்பருத்திப்பூ புதினா சர்பத் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம். செம்பருத்திப்பூ புதினா சர்பத் குளிர்ச்சியான, ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை கொண்டு செய்யப்படும் குளிர்பானம். இது போன்ற வீட்டிலேயே சுத்தமாக செய்யப்பட்ட , சத்தும் நிறைந்த குளிர்பானங்களை செய்து குடிப்பதால் உடல் ஆரோக்கியமும் மேம்படும் சுவையும் அபாரமாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Drinks
Cuisine: Indian
Keyword: Sweet Drinks
Yield: 3 People
Calories: 144kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கண்ணாடி டம்ளர்

தேவையான பொருட்கள்

  • 10 சிவப்பு செம்பருத்தி பூ
  • 1 கப் தண்ணீர்
  • 1 கப் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 5 புதினா இலை
  • 1 டீஸ்பூன் சப்ஜா விதை

செய்முறை

  • முதலில் பூவை நன்றாக கழுவி அதன் இதழ்களை மட்டும் பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும், அத்துடன் எடுத்து வைத்திருக்கும் செம்பருத்தி பூ சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை ஆப் செய்து விட்டு 10 நிமிடம் ஒரு தட்டு வைத்து மூடி வைத்து விட்டு பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப் சக்கரை, 1/2 கப் தண்ணி, புதினா சேர்த்து பிசுபிசுப்பு பதம் வரும் வரை கொதிக்க விட்டு எடுத்து வைத்து விடவும்.
  • 10 நிமிடத்துக்கு பிறகு பூவின் எசென்ஸ் முழுவதுமாக இறங்கி நல்ல பிங்க் கலரில் ஜூஸ் கிடைக்கும், அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
  • பின் சப்ஜா விதையை தண்ணீரில் ஊற விட்டு வைத்துக் கொள்ளவும்.
  • செம்பருத்தி ஜூசுடன் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரை புதினா சிறப்பை வடிகட்டி சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
  • அருமையான கலரில் அழகான ஆரோக்கியமான செம்பருத்தி சிறப்பு தயார்.
  • பின் ஒரு கண்ணாடி டம்பளர் எடுத்து அதில் முதலில் கொஞ்சம் சப்ஜா விதையை ஒரு ஸ்பூன் சேர்த்து 1/4 பங்கு செம்பருத்தி சிறப்பு விட்டு அதற்க்கு மேல் தேவையான தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இப்பொழுது எளிமையாக இயற்க்கை முறையில் செய்த சுவைமிக்க அருமையான செம்பருத்தி புதினா சர்பத் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 144kcal | Carbohydrates: 5.8g | Protein: 3.6g | Fat: 11g | Saturated Fat: 4.1g | Sodium: 244mg | Fiber: 30g | Sugar: 22g | Vitamin A: 220IU