- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
ரெஸ்டாரண்ட்ல கிடைக்கக்கூடிய இந்த ஹனி சில்லி பொட்டேட்டோ நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனால் இதை ரெஸ்டாரன்ட்ல போய் ஒரு பிளேட் வாங்குனாலே நிறைய காசு சொல்லுவாங்க. அதனால இனிமேல் இதை ரெஸ்டாரண்ட்ல வாங்காம வீட்டிலேயே உங்களுக்கு புடிச்ச மாதிரி செஞ்சு பாருங்க. கண்டிப்பா கடையில கிடைக்கிற மாதிரி சூப்பரா வீட்டில் கிடைக்கும். இந்த ரெசிபியை வீட்டிலேயே சூப்பரா செய்ய முடியும் வீட்டில் செய்ய முடியுமா அப்படின்னு யோசிக்க வேண்டாம். இது செய்றதுக்கு சாஸ் தேவைப்படும் அதனால கடையில போய் தக்காளி சாஸ் சோயா சாஸ் சில்லி சாஸ் இது வாங்கி வச்சுக்கோங்க. இதுக்கு நிறைய காசு செலவாகாது சின்ன சின்ன பாக்கெட் கிடைக்கும் அதுவே வாங்கிக்கலாம்.
இந்த ஹனி சில்லி பொட்டேட்டோ சாப்பிடுறதுக்கு நல்லா கிரிஸ்பியாவும் செம ஜூஸியாவும் சாப்டாவும் இருக்கும். ஒரே ஒரு தடவை வீட்டில் இதை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் கடையில போய் வாங்கவே மாட்டீங்க எப்பவுமே வீட்லயே வாங்கி செஞ்சுப்பீங்க. இந்த சுவையான ஹனி சில்லி பொட்டேட்டோவ அப்படியே ஸ்னாக்ஸ் மாதிரி சாப்பிடலாம் இல்லனா ப்ரைட் ரைஸ் செஞ்சு அதுக்கு சைடு டிஷ்ஷா சாப்பிடலாம். அப்படியே சும்மா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். குழந்தைகள் கிட்ட இன்னைக்கு ஹனி சில்லி பொட்டேட்டோ செஞ்சிருக்கேன் மட்டும் சொல்லு பாருங்க.
குழந்தைகள் குஷி ஆயிடுவாங்க குழந்தைகள் மட்டுமல்லாமல் வீட்ல இருக்க கூடிய எல்லாருமே குஷியாகிடுவாங்க ஏன்னா உருளைக்கிழங்குல என்ன செஞ்சு கொடுத்தாலும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். உருளைக்கிழங்கு வச்சு மெயின் டிஷ்ஷம் செய்யலாம் சைடு டிஷும் செய்யலாம் இந்த மாதிரி சைனீஸ் டிஷ்ஷூம் செய்யலாம். என்ன டிஷ் செஞ்சாலும் டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த சூப்பரான சைடு டிஷ் ரெசிபியை சைனீஸ் ரெசிபியை கண்டிப்பா இதே செய்முறையில் செஞ்சு பார்த்தீங்கன்னா கடையில கிடைக்கிற மாதிரி வீட்டிலேயே செஞ்சு சாப்பிட முடியும். இப்ப வாங்க இந்த சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஹனி சில்லி பொட்டேட்டோ எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு தக்காளி மசியல்
Ingredients
Method
உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி கழுவி துடைத்துக் கொள்ளவும்.
அதனுடன் உப்பு அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள்ஸ்பூன் சோள மாவு சேர்த்து கலந்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய இஞ்சி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
பெரிய வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு சோயா சாஸ் தக்காளி சாஸ் சில்லி சாஸ் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் வினிகர் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
மீதி இருக்கும் சோளமாவை தண்ணீரில் கரைத்து அதனையும் சேர்த்து கிளறவும்.
பிறகு பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கலந்ததும் வெள்ளை எள் வெங்காயத்தாள் சேர்த்து தேன் சேர்த்து இறக்கினால் சுவையான ஹனி சில்லி பொட்டேட்டோ தயார்.






