சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இதமா சுவையான நுங்கு மேங்கோ மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

சுட்டெரிக்கும் சூரியன் நாள் முழுவதும் நம்மை தொந்தரவு செய்கிறது, அதே நேரத்தில் அது நமது ஆற்றல் அனைத்தையும் அழிக்கிறது. கோடைக்காலத்தில் உங்களின் சிறந்த பானமாக இருக்கும் நுங்கு மேங்கோ மில்க் ஷேக் சக்தியை கூட்டி சிறந்த ஆற்றல் தரும்.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து குடிக்கும் அளவிற்கு சுவையான இந்த நுங்கு மேங்கோ மில்க் ஷேக் எப்படி செய்வது? இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.

-விளம்பரம்-
Print
No ratings yet

நுங்கு மேங்கோ மில்க் ஷேக் | Ice Apple Mango Milk shake Recipe In Tamil

சுட்டெரிக்கும் சூரியன் நாள் முழுவதும் நம்மை தொந்தரவு செய்கிறது, அதே நேரத்தில் அது நமது ஆற்றல் அனைத்தையும் அழிக்கிறது. கோடைக்காலத்தில் உங்களின் சிறந்த பானமாக இருக்கும் நுங்கு மேங்கோ மில்க் ஷேக் சக்தியை கூட்டி சிறந்த ஆற்றல் தரும்.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து குடிக்கும் அளவிற்கு சுவையான இந்த நுங்கு மேங்கோ மில்க் ஷேக் எப்படி செய்வது? இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Juice
Yield: 4 people
Calories: 257kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 மாம்பழம் பெரியது
  • 15 நுங்கு
  • 1/2 லிட்டர் பால்
  • சீனி தேவையான அளவு
  • 50 கிராம் பாதாம்
  • 50 கிராம் பிஸ்தா

செய்முறை

  • நுங்கு மற்றும் மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். பாதாம் மற்றும் பிஸ்தாவை நீளவாக்கில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  • பாலை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். மிக்ஸி ஜாரில் மாம்பழ துண்டுகளைப்போட்டு ஒரு அடி அடித்த பிறகு அதனுடன் பால் மற்றும் சீனி இவைகளை சேர்த்து நன்கு அடிக்கவும்.
  • அடித்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவைக்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டிய நுங்கையும் சேர்க்கவும்.
  • பிறகு அதனுடன் நீளவாக்கில் வாக்கில் வெட்டிய பாதாம் மற்றும் பிஸ்தாவையும் சேர்த்து கலக்கவும்.
  • பிறகுகப்புகளில் இதனை ஊற்றி பாதாம் மற்றும் பிஸ்தாவை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

Nutrition

Serving: 250g | Calories: 257kcal | Carbohydrates: 40g | Protein: 6g | Fat: 8.4g | Cholesterol: 33mg | Sodium: 100mg | Potassium: 8mg | Sugar: 55g
- Advertisement -