- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
இஞ்சி புளி ஊறுகாய் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் ஏன் ஊறுகாய் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். பழைய சாதத்துக்கு கூட ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும். ஒரு சிலர் ஊறுகாயை சாம்பார் சாதம், ரசம் சாதம் சில கலவை சாதங்கள் அப்படின்னு சைடு வச்சு சாப்பிடுவாங்க. அதுலையும் தயிர் சாதத்துக்கு எல்லாம் செம காம்பினேஷன். ஆனா அந்த ஊறுகாயை நம்ம வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சுத்தமா செய்யலாம். கடைகளில் பாக்கெட்ல இருக்கக்கூடிய ஊறுகாய் வாங்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது. ஊறுகாயை பொறுத்த வரைக்கும் நிறைய வெரைட்டீஸ் இருக்கு.
எலுமிச்சை ஊறுகாய், பூண்டு ஊறுகாய், தக்காளி ஊறுகாய் அந்த வகையில் இன்னைக்கு நம்ம பாக்க போறது நல்ல காரசாரமான புளிப்பான இஞ்சி புளி ஊறுகாய். இந்த இஞ்சி புளி ஊறுகாய் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். அது உன் வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் ஒரு சூப்பரான இஞ்சி புளி ஊறுகாய் செய்யலாம். வீட்ல எந்த ஒரு சைடு டிஷ்ஷும் இல்லாத போது இந்த ஊறுகாயை சைடு வச்சு சாப்பிட்டா போதும் ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம். இந்த ஊறுகாயை வெறும் சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். பாரம்பரியமான முறையில் செய்யக்கூடிய இந்த இஞ்சி புளி ஊறுகாய் எப்படி ஈசியா செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!
Ingredients
Method
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை வெந்தயம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும் பச்சை மிளகாயை நன்றாக இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
இஞ்சியை மிகவும் லேசாக பொடி பொடியாக வெட்டி சேர்த்து நன்றாக கிளறவும்.இஞ்சியின் பச்சை வாசனை போன பிறகு மிளகாய் தூள் உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
புளியை கரைத்து கரைசலை சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு எடுத்து வைத்துள்ள வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி சுண்டி வரும் வரை வேக வைக்கவும். கெட்டியான பிறகு இறக்கினால் சுவையான இஞ்சி புளி ஊறுகாய் தயார்.






