கோவக்காய் வச்சு பெரும்பாலும் கோவக்காய் வறுவல் கோவக்காய் கூட்டு தான் செஞ்சிருப்போம். ஆனா இந்த கோவக்காய் வச்சு சூப்பரான கோவக்காய் தொக்கு ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் தான் வீட்ல கோவக்காய் வாங்கினாலே இந்த கோவக்காய் தொக்குதா வச்சு சாப்பிடுவீங்க. சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். அது மட்டும் இல்லாம இட்லி தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும் இந்த கோவக்காய் தொக்கு. இதோட டேஸ்ட் அவ்வளவு சூப்பராவே இருக்கும்.
பார்த்தாலே நாக்கில் எச்சில் வரும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்ட்ல இந்த கோவக்காய் தொக்கு கிடைக்கும். உங்க வீட்டில ஒரே ஒரு தடவை மட்டும் இந்த கோவக்காய் தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே இதோட டேஸ்ட்டுக்கு அடிமையாகிடுவாங்க. அதுக்கப்புறம் அடிக்கடி உங்க வீட்ல இதைத்தான் செய்வீங்க. இந்த தொக்குல சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம். வேலைக்கு போறவங்களும் எடுத்துட்டு போகலாம்.
அதுமட்டுமில்லாம இந்த கோவக்காய் தொக்க இன்னும் கொஞ்சம் கெட்டியா வெச்சோம் அப்படின்னா தயிர் சாதம் ரசம் சாதம் சாம்பார் சாதம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான சைடிஷ்ஷா இருக்கும். ரொம்ப ரொம்ப அருமையான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க. வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கு கூட சைவ விருந்துல இந்த கோவக்காய் தொக்கு வச்சு கொடுக்கலாம். கண்டிப்பா இது ஒரு அட்டகாசமான கிரேவியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கோவக்காய் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கோவைக்காய் தொக்கு | Ivy Gourd Thokku Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கி கோவைக்காய்
- 1 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கோவக்காய் நீளவாக்கில் நறுக்கி சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வதக்கி எடுக்கவும்.
- பிறகு ஒரு டீஸ்பூன் சோம்பு, நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- மிளகாய் தூள் குழம்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா, மல்லித்தூள் உப்பு அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
- நன்றாக பாதி வெந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து அரைத்து அந்த விழுதையும் சேர்த்து கிளறவும்.
- ஐந்து நிமிடம் கழித்து கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கோவக்காய் தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான இந்த கோவைக்காய் சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார்ன்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்க!!!