நாவில் எச்சி ஊறும் சுவையான ஜவ்வரிசி பொங்கல் இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் என்றாலே அவ்வளவு பிடிக்கும். அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பொங்கல் தான். அந்த வகையில் ஒரு முறை இப்படி ஜவ்வரிசியில் பொங்கல் செய்து பாருங்களே அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : சுவையான சேமியா கார பொங்கல் செய்வது எப்படி ?

- Advertisement -

அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இந்த சுவையான ஜவ்வரிசி பொங்கல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

Print
2 from 1 vote

ஜவ்வரிசி பொங்கல் | Javvarisi Pongal Recipe In Tamil

குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் என்றாலே அவ்வளவு பிடிக்கும். அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பொங்கல் தான். அந்த வகையில் ஒரு முறை இப்படி ஜவ்வரிசியில் பொங்கல் செய்து பாருங்களே அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Pongal, பொங்கல்
Yield: 4 people
Calories: 332kcal

Equipment

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 300 கிராம் ஜவ்வரிசி
  • 200 கிராம் வெல்லம்
  • 200 மி.லி பால்
  • 50 கிராம் நெய்
  • 10 முந்திரி
  • 5 காய்ந்த திராட்சை
  • 5 ஏலக்காய்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ஜவ்வரிசியை போடவும்.
  • ஜவ்வரிசி நன்றாக வெந்ததும், ஏலக்காய், வெல்லம் நன்கு தட்டி அதில் போடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு கிளறவும்.
  • ஜவ்வரிசி கெட்டி பதத்திற்கு வந்ததும் பால் மற்றும் நெய் சேர்க்கவும்.
  • அடுத்து ஒரு காடையை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வதக்கி ஜவ்வரிசில் போடவும்.
  • இப்பொழுது சுவையான ஜவ்வரிசி பொங்கல் தயார்.

Nutrition

Serving: 4g | Calories: 332kcal | Carbohydrates: 83g | Protein: 1g | Fat: 1g | Fiber: 1g

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here