பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த சப்பாத்தி. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக சீரகம் சேர்த்து செய்ய உள்ளோம். இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன. சப்பாத்தி என்று எடுத்துக் கொண்டால் நமக்கு முதலில் சிந்தனைக்கு வருவது உடல் இடையே குறைப்பதற்கு சப்பாத்தி சிறந்த உணவாக இருக்கும் என்ற அனைவரும் கூறுவார்கள்.
மேலும் சப்பாத்தியை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். வட இந்தியாவில் உள்ள மக்கள் சாப்பிடும் முக்கிய உணவுப் பொருளாக இருப்பது இந்த சப்பாத்தி தான். நீங்கள் வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தால், தக்காளி தொக்கையும் இந்த சப்பாத்தியும் செய்து கூட எடுத்துக்கொண்டு போகலாம். இன்று மென்மையான சீரக சப்பாத்தி எப்படி செய்வது என்ற சமையல் குறிப்பை இந்த தொகுப்பில் நாம் காணலாம். அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சீரக சப்பாத்தியை அடிக்கடி செய்வது சாப்பிடலாம்.
சீரக சப்பாத்தி | Jeera Chapati Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 கப் கோதுமை மாவு
- 1 கப் மைதா மாவு
- 2 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- 4 டீஸ்பூன் நெய்
- 1 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை
- 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் ஒரு பவுளில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை இரண்டையும் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் இதில் உப்பு, நாட்டுச்சக்கரை, நெய், சீரகம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவை அரை மணி நேரம் வரை ஒரு துணியால் மூடி ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின் மாவில் சிறிதளவு எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி பலகையில் வைத்து வட்ட வடிவமாக மெல்லியதாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு சுற்றி எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சீரக சப்பாத்தி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!