Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Dates Milk Shake
மில்க் ஷேக்குகள் என்றாலே அனைவரும் விரும்பி உண்ண கூடியது. நிறைய மில்க் ஷேக்குகள் அருந்துவதற்கு கடைகளில் கிடைக்கிறது. ஆனால் நாமே சுவையாகவும் சத்தாகவும் பேரிச்சம் பழம் மற்றும் டிரை ப்ரூட்சை வைத்து பேரிச்சம்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பேரிச்சம்பழம் மில்ஷேக Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2024.04.18பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சுவையான பேரிச்சை பழ மில்க் ஷேக் இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு கூட மிஞ்சமிருக்காது!

மில்க் ஷேக்குகள் என்றாலே அனைவரும் விரும்பி உண்ண கூடியது. நிறைய மில்க் ஷேக்குகள் அருந்துவதற்கு கடைகளில் கிடைக்கிறது. ஆனால் நாமே சுவையாகவும் சத்தாகவும் பேரிச்சம் பழம் மற்றும் டிரை ப்ரூட்சை வைத்து பேரிச்சம்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பேரிச்சம்பழம் மில்ஷேக

PK
எழுதியவர்Prem Kumar18 ஏப்ரல், 2024 அன்று 10:36 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
Drinks

மில்க் ஷேக்குகள் என்றாலே அனைவரும் விரும்பி உண்ண கூடியது. நிறைய மில்க் ஷேக்குகள் அருந்துவதற்கு கடைகளில் கிடைக்கிறது. ஆனால் நாமே சுவையாகவும் சத்தாகவும் பேரிச்சம் பழம் மற்றும் டிரை ப்ரூட்சை வைத்து பேரிச்சம்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பேரிச்சம்பழம் மில்ஷேக்கில் அதிக அளவு இரும்பு சத்து நார்ச்சத்து நிறைய வைட்டமின்கள் எல்லாம் இருக்கிறது.

குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் கடைகளிலிருந்து மில்க் ஷேக்குகள் ஜூஸ்கள் வாங்கித் தருவதை விட நாமே செய்து கொடுக்கும் பொழுது அதன் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. குழந்தைகளுக்கும் சத்து நேரடியாக செல்கிறது காரணம் நாமே செய்து கொடுக்கும் பொழுது நமக்கு ஏற்படும் மன திருப்தி அவர்களுக்கு மகிழ்ச்சி என இரண்டும் நிறைந்திருக்கிறது. பேரிச்சை பழம் உலர்ந்த நட்ஸ்கள் உடலுக்கு வலிமை தரக்கூடியவை.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும் ரத்தத்தை சுத்தம் செய்வதற்கும் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கும் இவை பயன்படுகின்றன. இவற்றை பாலோடு கலந்து உண்ணும் பொழுது அதிக அளவில் கால்சியம் வைட்டமின் புரோட்டின் இரும்பு சத்து அனைத்தும் கிடைக்கின்றது. இதில் சர்க்கரை சேர்க்காமல் செய்வதால் இயற்கையான சுவையுடன் மிகவும் சத்தாக இருக்கும். பேரிச்சம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்தின் செயல்பாட்டை வலுவாக்குகிறது. கர்ப்பிணி பெண்கள் பேரிச்சம்பழத்தை உண்டு வருவதால் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் உடல் எடையை குறைக்கலாம். பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும்.

மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும். இப்போது சுவையானசத்து மிக்க பேரிச்சம்பழ மில்கஷேக் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் பேரிச்சை பழங்களில் விதைகளை நீக்கிவிட்டு எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 கப் பாலை ஊற்றி காய்ச்சவும்.

  2. 2

    பால் சூடான பிறகு அதில் பேரிச்சை பழம், ஊற வைத்து தோல்நீக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து நன்றாக வேக வைக்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் மீடியம் ப்ளேமில் வைத்து நன்றாக வெந்ததும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

  3. 3

    நன்றாக கிளறி பால் கெட்டியாக மாறியதும் அடுப்பை அணைத்து விட்டு ஆற வைக்கவும். பால்பேரிச்சை நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் ஜூஸர் ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்.

  4. 4

    அரைத்த விழுதை தனியாக எடுத்து வைக்கவும். ஜூஸர் ஜாரில் அரைத்த விழுது 2 ஸ்பூன் 500 மில்லி காய்ச்சி ஆற வைத்து ஃப்ரிட்ஜ்ஜில் குளிரூட்டிய பாலை சேர்க்கவும்.

  5. 5

    மிக்ஸியில் அரைத்து ஜூஸ் க்ளாஸில் ஊற்றி பொடியாக நறுக்கிய பாதாம்,பேரிச்சை சேர்த்து பரிமாறினால் சுவையான சத்தான பேரிச்சைபழ மில்க் ஷேக் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 370 கலோரி
  • கொழுப்பு · 2.5g
  • புரதம் · 54g
  • கார்போஹைட்ரேட் · 77g
தலைப்புகள்
#நுங்கு மேங்கோ மில்க் ஷேக்#கேரட் மில்க் ஷேக்#பேரிச்சை பழ மில்க் ஷேக்#தேங்காய் பால் மில்க் ஷேக்#சங்குப்பூ மில்க் ஷேக்#ஆப்பிள் மில்க் ஷேக்#சப்போட்டா மில்க் ஷேக்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement