- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Drinks
பொதுவாக நாம் தினமும் டீ, காபி போன்றவற்றை குடிப்பதை பழக்கமாக வைத்திருப்போம், இனி இதற்கு பதிலாக அடிக்கிற வெயிலுக்கு குளு, குளுனும், வித்தியாசமாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் ராகி மாவை கொண்டு ஏதேனும் பானங்கள் செய்து குடிக்கலாம் வாங்க. அதாவது ராகி மாவை கொண்டு வித்தியாசமாக
இதையும் படியுங்கள் : சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி ?
ராகி கூல் மற்றும் ராகி பாதாம் மில்க் ஷேக் செய்து குடிப்பதினால் பசி அடங்கி சுறுசுறுப்பு கிடைப்பதுடன், மேலும் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.அதனால் இன்று இந்த ராகி பாதாம் மில்க் ஷேக் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ள வேண்டும். அவற்றில் ராகி மாவை போட்டு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறி விடவும்.
பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் கெட்டியாக வருமறை கிளறி விடவும்.ராகி மாவு கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும்.
பின்னர் மாவு நன்றாக குளிர்ந்தவுடன், மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, பாதாம் பவுடர், பால் சேர்த்து சிறிது நேரம் அரைக்க வேண்டும்.
பின்பு மிக்சியில் இருந்து அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் சுவையுள்ள மற்றும் ஆரோக்கியமான ராகி பாதாம் மில்க் ஷேக் தயார்.






