Home சைவம் ரம்ஜான் ஸ்பெஷல் கடல்பாசி இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க.

ரம்ஜான் ஸ்பெஷல் கடல்பாசி இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க.

இந்த ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கிறவங்க நோன்பு திறக்கும் போது அடிக்கடி செஞ்சு சாப்பிடக்கூடிய ஒன்னு தான் இந்த கடல்பாசி. இந்த ரம்ஜான் நோன்புல இந்த மாதிரி ஒரு தடவை நீங்களும் கடல் பாசி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதோட டேஸ்ட் அவ்ளோ அருமையா இருக்கும். இந்த வெயில் காலத்துல சாப்பிடுவதற்கும் ரொம்ப இதமா வாயில வச்சு உடனே கரைஞ்சு போயிடும்.

-விளம்பரம்-

நோன்பு திறக்கும் நிறைய காரமான உணவுகள் சாப்பிட்டு முடித்துவிட்டு லாஸ்ட்டா இந்த கடல்பாசி சாப்பிடும் போது நல்லா இனிப்பா அந்த காரசாரத்துக்கு ஏத்த மாதிரியான ஒரு ஸ்வீட்டா இருக்கும். இந்த கடல்பாசி நிறைய ஹோட்டல்ஸ்ல கிடைக்கும் ஆனா வீட்லயும் அதே மாதிரி சுவையில நம்மளால செய்ய முடியும். அட்டகாசமான ஒரு சுவையில சாப்பிடுற எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு ஸ்வீட்டா இருக்கும்.

நோன்பு திறக்குறவங்க மட்டும் இல்லாம எல்லாருமே உங்க வீட்ல இந்த கடல்பாசியை செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம். கண்டிப்பா அந்த டேஸ்டுக்கு அடிக்ட் ஆகிவிடுவீர்கள். ஒரு சூப்பரான டேஸ்ட்ல இருக்கக்கூடிய வாயில வச்ச உடனே கரையக்கூடிய இந்த கடல் பாசி சட்டுனு எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்

Print
5 from 1 vote

கடல்பாசி | Kadal Paasi recipe In tamil

நோன்பு திறக்கும் நிறைய காரமான உணவுகள் சாப்பிட்டு முடித்துவிட்டு லாஸ்ட்டா இந்த கடல்பாசி சாப்பிடும்போது நல்லா இனிப்பா அந்த காரசாரத்துக்கு ஏத்த மாதிரியான ஒரு ஸ்வீட்டா இருக்கும். இந்தகடல்பாசி நிறைய ஹோட்டல்ஸ்ல கிடைக்கும் ஆனா வீட்லயும் அதே மாதிரி சுவையில நம்மளால செய்யமுடியும். அட்டகாசமான ஒரு சுவையில சாப்பிடுற எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு ஸ்வீட்டா இருக்கும். ஒரு சூப்பரான டேஸ்ட்ல இருக்கக்கூடிய வாயில வச்ச உடனே கரையக்கூடிய இந்த கடல் பாசி சட்டுனு எப்படிசெய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Kadal Paasi
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/2 லிட்டர் தேங்காய் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் அகர் அகர்
  • 100 கிராம் சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பிஸ்தா

செய்முறை

  •  ஒரு கனமான பாத்திரத்தில் அகர் அகர் சேர்த்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கிளறவும்
  • பிறகு அகர் அகர் கெட்டியான உடன் அதில் தேங்காய் பால் ஏலக்காய் தூள் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்
  • ஐந்து நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
  • பிறகு அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து மறுபடியும் எடுத்துஅதன் மேல் பொடியாக்கியுள்ள பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து மறுபடியும் ஒரு அரை மணிநேரம் ஃப்ரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால் சுவையான கடல்பாசி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 112kcal | Carbohydrates: 3.6g | Protein: 4.5g | Sodium: 16mg | Potassium: 117mg | Vitamin A: 31IU | Calcium: 18.3mg | Iron: 2.26mg

இதையும் படியுங்க : இதுவரைக்கும் யாருமே சாப்பிட்டு பார்க்காத வகையில் ஒரு சூப்பரான கொய்யா அல்வா செய்யலாம்!