பொதுவாக நம்ம கடலை பருப்பு வச்சு எந்த ரெசிபியும் பெருசா செஞ்சிருக்க மாட்டோம் கடலை பருப்பு கூட வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை செய்வாங்க இல்லன்னா ஏதாவது பொரியல் செய்யும் போது தாளிக்கிறதுக்கு கடலைப்பருப்பு பயன்படுத்துவோம். பருப்பு உருண்டை குழம்பு செய்யும் போது கொஞ்சமா கடலைப்பருப்பு சேர்த்துப்போம். ஆனா மெயினா கடலை பருப்பு வச்சு யாரும் பெருசா எதுவும் செஞ்சிருக்க மாட்டோம் ஆனால் ஒரு தடவை கடலைப்பருப்பு வச்சு இந்த மாதிரி ஒரு கூட்டு மட்டும் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி இந்த கடலை பருப்பு கூட்டு செய்வீங்க. இந்த கடலைப்பருப்பு கூட்டு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இது கூட தேங்காய் துருவல் எல்லாம் சேர்க்கிறதால சாப்பிடறதுக்கு நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ருசியாவே இருக்கும்.
இந்த கடலை பருப்பு கூட்ட நீங்க வெறும் சாதத்துல போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இந்த கடலைப்பருப்பு கூட்டுலையே சாதம் போட்டு கிளறி ஸ்கூல் டிபன் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம். கண்டிப்பா குழந்தைகள் சாப்டுட்டு தான் வருவாங்க. இந்த கடலை பருப்பு வச்சு இந்த ரெசிபி செய்யும்போது கடலை பருப்பை நல்லா ஊற வச்சு வேக வச்சு எடுத்துட்டு அதுக்கப்புறம் தான் இந்த கூட்டு செய்ய போறோம். கடலை பருப்பு நல்லா வெந்தா தான் இந்த கூட்டு சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். கடலை பருப்பு சரியா வேகலைன்னா இந்த கூட்டம் நல்லாவே இருக்காது.
இந்தக் கூட்ட ரசம் சாதத்துக்கு தயிர் சாதத்துக்கு வெஜிடபிள் சாதம் தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு பாருங்க. ரொம்ப ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. சுண்டல் பட்டாணி மொச்சை பயிறு மாதிரி இந்த கடலை பருப்பில் நிறைய புரோட்டீன் சத்துக்கள் இருக்கு. அதனால கண்டிப்பா இந்த கடலை பருப்பு ரெசிபியை குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் சாப்பிட கொடுங்க. இப்ப வாங்க இந்த ருசியான ரெசிபியை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
கடலைப்பருப்பு கூட்டு | Kadalai Parupu Kootu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 50 கி கடலை பருப்பு
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் சேர்த்து தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- தக்காளியை அரைத்து அந்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு மிளகாய் தூள் மல்லி தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கடலைப்பருப்பு சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.
- இறுதியாக தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கடலைப்பருப்பு கூட்டு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க கடலைப்பருப்பு குழம்பு இப்படி வைத்து பாருங்கள், சாப்பிட அருமையாக இருக்கும்!