- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
நாம் இந்த சாம்பாரை பல்வேறு வகைகளில் வைப்பபோம் ஒவ்வொரு ஊர்களில் வித்தியாசமாக மணமும் சுவையில் சாம்பார் நன்றாகவே இருக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது திருவாரூர் ஸ்டைல் கதம்ப சாம்பார் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த கதம்ப சாம்பார் உண்மையிலே மிகவும் சுவையாக அற்புதமான முறையில் இருக்கும். பொதுவாக பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளிலும், வடை பாயாசத்துடன் சாப்பாடு செய்து, அசத்துவார்கள். சில பண்டிகைக்கு ஸ்பெஷலான ரெசிபி என்று இருக்கும். அதேப் போன்று, இப்போது வரும் பொங்கல் பண்டிகைக்கு செய்யும் ஸ்பெஷல் உணவுகளில் கதம்ப சாம்பாரும் ஒன்று. இந்த கதம்ப சாம்பரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பலவிதமான காய்கறிகளைப் போட்டு செய்வது தான். அதுவும் இதனை சிலர் காணும் பொங்கலன்று செய்து சாப்பிடுவார்கள்.
அது அந்தந்த பண்டிகைக்குரிய வழக்கமாக காலகாலமாக செய்து வரப்படுகிறது. சிலர் இந்த காதம்ப சாம்பாரில் 7 காய்கறிகள் என்றெல்லாம் எண்ணிக்கை வைத்து செய்வார்கள். சமையலில் எப்படி தினம் தினமும் வித்தியாசத்தை கொண்டு வருவது என தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, நிச்சயம் இந்தக் கதம்ப சாம்பார் கைகொடுக்கும். இருக்கும் காய்கறிகளை வைத்துக்கொண்டு மிகவும் குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையான சாம்பார் இனி இதுபோன்று செய்து பாருங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும். உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்து இதுபோன்ற முறையில் சாம்பார் வைத்துப் பாருங்கள், பாராட்டுகள் நூறு சதவிகிதம் உறுதி! இப்போது அந்த கதம்ப சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போம்!!
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார் இப்படி செய்து கொடுக்க இனி வீட்ல முள்ளங்கி சாம்பார் இப்படி செஞ்சி!
Ingredients
Method
முதலில் எல்லா காய்கறிகளையும் நன்கு அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் பருப்பை நன்கு சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து அதனுடன் பெருங்காயம், மஞ்சள் தூள் சிறிதளவு எண்ணெய் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதன்பிறகு எல்லா காய்கறிகளையும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும். பின் மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
சாம்பார் நன்கு கொதித்ததும் புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் பருப்பை சேர்த்து கலந்து சிறிது நேரம் கழித்து கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான கதம்ப சாம்பார் தயார். இதை இட்லி தோசை மற்றும் வெள்ளை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.






