Advertisement
சைவம்

ருசியான கல்யாணவீட்டு வத்தல் குழம்பு இப்படி செய்து பாருங்க? இதன் சுவையே தனி தான்!

Advertisement

நாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு வகை என்றால் அது வத்த குழம்பு தான். ஆனால் நம் வீட்டில் செய்யும் வத்த குழம்பு அல்லது கடைகளில் ரெடிமேட் ஆக பாக்கெட்டுகளில் விற்கும் வத்த குழம்புகளை சாப்பிடுவதற்கு பரிமாறினால் பெரிதாக ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளில் மற்றும் கல்யாண வீடுகளில் வைக்கும் வத்தல் குழம்பு என்றால் மட்டும் ஏன் என்று தெரியவில்லை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இதையும் படியுங்கள் : ஸ்ரீரங்கம் அய்யர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

கவலையாக உள்ளதா நான் இருக்கும் போது உங்களுக்கு ஏன் இந்த கவலை இன்று கல்யாண வீடுகளில் வைப்பது போன்று சுவையான வத்தல் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் பார்க்கலாம் வாருங்கள்.

கல்யாணவீடு வத்தல் குழம்பு | Vathal Kulambu Recipe in Tamil

Print Recipe
நாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு வகை என்றால் அது வத்த குழம்பு தான். ஆனால் நம் வீட்டில் செய்யும் வத்த குழம்பு அல்லது கடைகளில் ரெடிமேட் ஆக பாக்கெட்டுகளில் விற்கும் வத்த குழம்புகளை சாப்பிடுவதற்கு பரிமாறினால் பெரிதாக ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளில் மற்றும் கல்யாண வீடுகளில் வைக்கும் வத்தல் குழம்பு என்றால் மட்டும் ஏன் என்று தெரியவில்லை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். கவலையாக உள்ளதா நான் இருக்கும் போது உங்களுக்கு ஏன் இந்த கவலை இன்று கல்யாண வீடுகளில் வைப்பது போன்று சுவையான வத்தல் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் பார்க்கலாம் வாருங்கள்.
Course LUNCH, Main Course
Cuisine Indian, TAMIL
Keyword KALAYANA VEEDU VATHAL KULAMBU, கல்யாணவீடு வத்தல் குழம்பு
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5
Calories 110

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

வத்தல் குழம்பு பொடி செய்ய

Advertisement
  • கை பிடி அளவு தனியா
  • 6 piece சிவப்பு மிளகாய்
  • 1 tbsp மிளகு
  • 2 tbsp துவரம்பருப்பு
  • 1 tbsp வெந்தயம்
  • ¼ tbsp பெருங்காயம்            
  • 1 tbsp சீரகம் 

தாளிப்பதருக்கு

  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1 tbsp கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை           
  • 1 tbsp வெந்தயம்
  • 5 piece சிவப்பு மிளகாய்

குழம்பு செய்ய தேவையான பொருள்கள்

  • எலுமிச்சை அளவு புளி ஊற வைத்துகொள்ளுங்கள்
  • 2 குழி கரண்டி நல்லெண்ணெய்
  • ½ tbsp மஞ்சள் தூள்  
  • 2 tbsp மிளகாய்த்தூள்
  • சுண்டக்காய் வத்தல் தேவையான அளவு
  • 1 கை அளவு பூண்டு                          
  • 4 சின்ன வெங்காயம்
  • கருவேப்பிலை            சிறிது
  • உப்பு                             
    Advertisement
    தேவையான அளவு

Instructions

  • முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து வத்தல் குழம்பு பொடி செய்வதற்காக மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.வழக்கம் போல் எண்ணெய் ஊற்றி வறுத்தெடுக்காதீர்கள்.
  • எண்ணெய் ஊற்றாமல் வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுங்கள் பின் நம் வறுத்து எடுத்துக் கொண்ட பொருட்களை சூடு இறங்கியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக தூள் செய்து கொள்ளுங்கள்.
  • பின்பு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து இரண்டு குழி கரண்டி எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடேறும் வரை காத்திருக்கவும். என்னை சூடு ஏறியவுடன் கடுகு, சிவப்புமிளகாய், வெந்தயம், கருவேப்பிலை, சுண்டக்காய் வத்தல் தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  • நீங்கள் சேர்த்துள்ள வத்தல் நன்றாக கருத்து வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். பின் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் முறை வதக்கி கொள்ளுங்கள்.
  • வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன். ஊற வைத்திருக்கும் புளியை கரைத்து தேவையான அளவு ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
  • பின்பு நன்றாக கொதிக்கும் வரை காத்திருங்கள் கொதித்து வந்தவுடன் நம் பொடி செய்து வைத்திருக்கும் வத்தல் குழம்பு பொடியை 5 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும் பின் 1 ஸ்பூன் பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.
  • அதன் பின்பு ஒரு நிமிடம் நன்றாக அடுப்பில் வைத்து கிளறிவிட்டு அதன் பிறகு கடாயை இறக்கி விடவும் இப்பொழுது சுவையான கல்யாண வீடு வத்தல் குழம்பு தயாராகி விட்டது.

Nutrition

Serving: 5person | Calories: 110kcal | Protein: 12g | Fat: 2.1g | Sodium: 6mg | Potassium: 321mg | Fiber: 2g | Iron: 29.8mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

2 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

3 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

5 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

10 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

13 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

14 மணி நேரங்கள் ago