Advertisement
சைவம்

காரசாரமான ருசியில் மாங்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்கள்! இந்த வருடம் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய ரெசிபியாம்!

Advertisement

15 வருடங்களுக்கு முன்பல்லாம் நமது வீடுகளில் எப்பொழுதுமே ஊறுகாய் அல்லது தொக்கு ஒன்று ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். காலை நேரங்களில் கஞ்சி குடிக்கும் பொழுது, காலை சோறுடன் சாப்பிட கூட்டு, பொரியல் எனது இதுவும் இல்லாத சமயங்களில் இந்த ஊறுகாய் அல்லது தொக்கை சைடிஷ் ஆக நாம் உணவை சாப்பிட்டு முடிப்போம். ஆனால் இப்போதெல்லாம் பெருபாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதே அறிதாகிவிட்டது. ஆனாலும் இன்னும் நிறைய பேருக்கு ஊறுகாய் வைத்து சாப்பிடுவது பிடிக்கும் ஆனால் அவர்களுக்கு செய்யத் தெரியாது.
அதனால் இன்று நாம் மாங்காய் செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம் அதுவும் உங்களில் நிறைய பேருக்கு கல்யாண பந்தியில் வைக்கப்படும் மாங்காய் ஊறுகாய் பிடித்திருக்கும். இன்று நாமும் அதே கல்யாண பந்தியில் வைக்கும் மாங்காய் ஊறுகாய் செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம் இது அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த கல்யாண பந்தி மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கல்யாண பந்தி மங்காய் ஊறுகாய் | Kalyana Panthi Mango Pickle Recipe in Tamil

Print Recipe
காலை நேரங்களில் கஞ்சி குடிக்கும் பொழுது, அல்லது சோறுடன் சாப்பிட கூட்டு, பொரியல் எனது இதுவும் இல்லாத சமயங்களில் இந்த ஊறுகாய் அல்லது தொக்கை சைடிஷ் ஆக நாம் உணவை சாப்பிட்டு முடிப்போம். ஆனால் இப்போதெல்லாம் பெருபாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதே அறிதாகிவிட்டது. ஆனாலும் இன்னும் நிறைய பேருக்கு ஊறுகாய் வைத்து சாப்பிடுவது பிடிக்கும் ஆனால் அவர்களுக்கு செய்யத் தெரியாது அதனால் இன்று நாம் மாங்காய் செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம் அதுவும் உங்களில் நிறைய பேருக்கு கல்யாண பந்தியில் வைக்கப்படும் மாங்காய் ஊறுகாய் பிடித்திருக்கும். இன்று நாமும் அதே கல்யாண பந்தியில் வைக்கும் மாங்காய் ஊறுகாய் செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம்
Course Side Dish
Cuisine Indian, TAMIL
Keyword mango pickle
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5
Calories 60

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பாத்திரம்
  • 1 பெரிய பவுள்
    Advertisement

Ingredients

வறுத்து பொடி செய்ய

  • 1/2 கப்  கடுகு
  • 1/4 கப்  வெந்தயம்

ஊறுகாய் செய்ய

  • 1 கிலோ மாங்காய்
  • 1/2 கப்  உப்பு
  • 2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  • 2 டீஸ்பூன் மஞ்சள் துள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காய தூள்
  • 1/2 கப்  மிளகாய் தூள்
  • 1 கப்  எண்ணெய்
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் கடுகு

Instructions

  • முதலில் ஒரு அரை கிலோ மாங்காய்களை எடுத்துக் கொண்டு தண்ணீரை வைத்து நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்பு மாங்காயின் மேற்புறம் மற்றும் கீழ் புற காம்புகளை வெட்டி எடுத்துவிட்டு ஒரு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு தண்ணீரில் ஊறிய மாங்காயை ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் ஒரு துணியை வைத்து
    Advertisement
    தொடைத்து எடுத்துக் கொள்ளுங்கள் பின் கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய தட்டில் வைத்து ஒரு மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு வெயிலில் உலர்த்திய மாங்காயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இதனுடன் அரை கப் அளவிற்கு உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து ஒரு மணி நேரங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் கால் கப் கடுகு மற்றும் கால் கப் வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள்.
  • பின் கடுகு பொரிந்து வந்தவுடன் கடாயை கீழ் இறக்கி குளிர வைத்து பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அமைத்துக் கொள்ளுங்கள். பின் உப்பு சேர்த்து ஊற வைத்த மாங்காயுடன் ஒரு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கிளறி விடுங்கள்.
  • பின்பு மாங்காயுடன் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், அரை கப் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி என்னை நன்கு காய்ந்ததும் இரண்டு டீஸ்பூன் கடுகு சேர்த்து கொள்ளவும்.
  • பின் கடுகு பொரிந்து வந்தவுடன் இரண்டு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கடாயை இறக்கி. எண்ணெய் சூடாக இருக்கும் போதே மாங்காயுடன் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பின் பாத்திரத்தை மூடி நான்கு நாள் கழித்து பாருங்கள் கல்யாண பந்தி மாங்காய் ஊறுகாய் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Fat: 0.9g | Sodium: 21mg | Potassium: 382mg | Fiber: 7g | Sugar: 0.02g

இதையும் படியுங்கள் : நீண்ட நாட்கள் கெடாத பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி

Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

9 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

10 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

11 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

12 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

15 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

15 மணி நேரங்கள் ago