- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- andhra, Indian
- Course
- Breakfast, dinner
பலவகையான மொழி, கலாச்சாரம் நிறைந்திருக்கும் இந்தியாவில், உணவுமுறைகளும் அதன் சுவைகளும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. தமிழர்களின் உணவுகளில் காரம், உப்பு, புளிப்பு சுவைகள் சரிசமமாக சேர்க்கப்படுகிறது. இதுவே கர்நாடகா பக்கம் சென்றால் எல்லா உணவிலும் லேசான இனிப்புச் சுவை தட்டும். கேரளா என்றால் தேங்காய் எண்ணெயின் மணம். ஆந்திரா என்றால் காரம். ஆந்திரா என்றாலே நமக்கு காரம் தான் முதலில் நினைவிற்கு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் குண்டூர் காரத்திற்கு பிரபலமான ஊராகும். இந்த ஊரின் சிறப்பு உணவான கார முட்டை தோசை எப்படி செய்வது என காணலாம்.
ஒரு சிலருக்கு தோசையை அப்படியே சாப்பிடுவதை விட அதுக்கு மேல வெங்காயம் முட்டை இந்த மாதிரி சேர்த்து வெங்காய தோசை, முட்டை தோசை, கேரட் தோசை வெஜிடபிள் தோசை பன்னீர் தோசை அப்படின்னு ஏதாவது டிஃபரண்டா சாப்பிடுவதற்கு தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான கார முட்டை தோசை பார்க்க போறோம். இந்த கார முட்டை தோசை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்மே தேவைப்படாது. வேணும்னா தேங்காய் சட்னியை சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிடும் போது சுவை இன்னும் கூடுதலாகவே இருக்கும்.
ரொம்ப ரொம்ப ருசியான இந்த நெய் கார தோசை மொறுமொறுன்னு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். தோசை ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த கார முட்டை தோசையும் ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமில்லாம காரசாரமாக சாப்பிட பிடிக்கும் அப்படின்னாலும் இந்த கார முட்டை தோசை ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த கார முட்டை தோசைக்கு எல்லா விதமான சட்னியும் டேஸ்ட்டாவே இருக்கும். இல்ல அப்படின்னா அப்படியே எதுவுமே செய்யாம சாப்பிடலாம். இந்த ருசியான நெய் சேர்த்து செய்யக்கூடிய கார முட்டை தோசை ரெசிபியை கண்டிப்பா இன்னைக்கே கூட நீங்க வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான கார முட்டை தோசை எப்படி சீக்கிரத்துல செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அந்திரா பச்சை பயறுைதோசை
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் வர மிளகாயை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், உப்பு, புளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் முட்டை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, மிளகு தூள், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றி அதன்மேல் அரைத்து வைத்துள்ள சட்டியை பரப்பவும். அதன்பிறகு கலந்து வைத்துள்ள முட்டையை சேர்த்து சுற்றி நெய் விடவும்.
தோசை ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கார முட்டை தோசை தயார்.






