- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 10 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் மசாலா பொருட்கள் மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வீட்டில் உள்ள மசாலா பொருட்கள் வைத்து ஒரு வித்தியாசமான கார தொக்கு செய்து பாருங்கள்.
தமிழகத்தில் சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள். ஏனென்றால் சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கின் காம்பினேஷன் அவ்வாறு. எப்போதும் ஒரே மாதிரி தக்காளி தொக்கு செய்யாமல் சற்று வித்தியாசமாக இந்த கார தொக்கு செய்யுங்கள். சப்பாத்திக்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் ஒரு அருமையான ரெசிபி தான் இந்த கார தொக்கு.
முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த தொக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம். வேலை விட்டு வந்து சமைக்க முடியாத நேரத்திலும் பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்திலும் இந்த தொக்கை வைத்து சாப்பிடலாம். இப்போது சூப்பரான கார தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் மிளகாய் தூள், குழம்பு மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், இடித்த பூண்டு, மிளகு தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பவுளில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கார தொக்கு தயார்.






