கருணைக்கிழங்கு வச்சு கார குழம்பு செஞ்சு பார்த்தீங்கன்னா, அவ்வளவு சூப்பரா இருக்கும். சுட சுட சாதத்துல அந்த கருணைக்கிழங்கு கார குழம்பு ஊத்தி சைடு டிஷ்ஷா ஆம்லெட் இல்லனா அப்பளம் வைத்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். கருணைக்கிழங்கு வச்சு வருவல் பொரியல் இது கூட செய்யலாம் ஆனா இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமாக கருணைக்கிழங்கு மசியல் செய்ய போறோம். இந்த கருணைக்கிழங்கு மசியல் சுட சுட சாதத்தில் போட்டு நெய் ஊத்தி சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரா இருக்கும். உடம்புல இருக்கக்கூடிய செரிமான பிரச்சனைகள் மலச்சிக்கல் பிரச்சனை மூலம் இது எல்லாத்தையும் சரி செய்யக்கூடிய குணம் இந்த கருணைக்கிழங்கு மசியலுக்கு இருக்கு. அதுமட்டுமில்லாமல் சுட சுட ரசம் சாதம் பருப்பு சாதம் வச்சு அதுக்கும் கூட சைடு டிஷ்ஷா இந்த கருணை கிழங்கு மசியலை வைத்து சாப்பிடலாம்.
சுவை ரொம்ப அட்டகாசமாக இருக்கும். நிறைய சத்துக்கள் இருக்கா இந்த கருணைக்கிழங்கை பொதுவாக யாரும் வாங்கி சமைக்க மாட்டாங்க. ஆனா நிறைய ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இந்த சுவையான கருணைக்கிழங்கு வச்சு இந்த ரெசிபியை செஞ்சு அடிக்கடி சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல காரசாரமா புளிப்பா சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். கருணைக்கிழங்கு வாங்குன உடனே செஞ்சா கண்டிப்பா நாக்கு அரிக்கும். அதனால கொஞ்ச நாளைக்கு அப்புறமா இந்த கிழங்குல இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. கூடவே புளி கரைசல் இருக்கிறதால கண்டிப்பா நாக்கு அரிக்கிற பிரச்சனை கொஞ்சம் கம்மியா இருக்கும்.இப்ப வாங்க இந்த கருணைக்கிழங்கு மசியல் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
கருணைக்கிழங்கு மசியல் | Karunai Kizhangu Masiyal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 கருணைக்கிழங்கு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கைப்பிடி நறுக்கி சின்ன வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 தக்காளி
- 1 துண்டு புளி
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- கருணைக்கிழங்கை ஒரு குக்கரில் சேர்த்து உப்பு சேர்த்து ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மசித்து அதனுடன் புளிக்கரைசல் ஒரு தக்காளி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு வெந்தயம் சீரகம், கருவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ளதை சேர்த்துக் கொள்ளவும்.
- அதனை நன்றாக வேக வைத்து கெட்டியான பிறகு இறக்கினால் சுவையான கருணைக்கிழங்கு மசியல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான கருணைக்கிழங்கு பொடிமாஸ் இப்படி செய்து பாருங்கள் இதன் சுவை அசைவத்தையே மிஞ்சி விடும் அளவிற்கு இருக்கும்!!!