மதிய உணவுக்கு கருனைகிழங்கு மசியல் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

அசத்தலான சுவையுடைய கருணைக்கிழங்கு மசியல் ,ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்க. கிழங்கு வகைகளிலே உருளைக்கிழங்கை தான் நாம் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவோம். கருணைக்கிழங்கிலும் சாம்பார், புளிக்குழம்பு, மசியல்னு நிறைய செய்யலாம்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கல்யாண வீடு உருளைக்கிழங்கு மசால் செய்வது எப்படி!

- Advertisement -

குறிப்பாக மசியல் அதீத சுவையுடன் இருக்கும். சாம்பார், பருப்பு ரசத்துக்கு மேட்சான சைட் டிஷ் இது. அதோடு கருணைக்கிழங்கு மருத்துவம் நிறைந்ததும்கூட. மூலத்துக்கு இது ரொம்ப நல்லது. வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
No ratings yet

கருனைக்கிழங்கு மசியல் | Karunai Kilangu Masiyal Recipe in Tamil

அசத்தலான சுவையுடைய கருணைக்கிழங்கு மசியல் ,ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்க. கிழங்கு வகைகளிலே உருளைக்கிழங்கை தான் நாம் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவோம். கருணைக்கிழங்கிலும் சாம்பார், புளிக்குழம்பு, மசியல்னு நிறைய செய்யலாம். குறிப்பாக மசியல் அதீத சுவையுடன் இருக்கும். சாம்பார், பருப்பு ரசத்துக்கு மேட்சான சைட் டிஷ் இது. அதோடு கருணைக்கிழங்கு மருத்துவம் நிறைந்ததும்கூட.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Karunai Kilangu, கருனைக்கிழங்கு
Yield: 4 People
Calories: 135kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/2 KG கருனைக்கிழங்கு
  • 2 தக்காளி நறுக்கியது
  • சிறிது புளி புளி கரைசல் செய்ய
  • 1 Tsp மஞ்சள் தூள்
  • 1 1/2 Tbsp மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 Tsp மல்லி தூள்
  • 4 Tbsp தேங்காய் துருவல்

தாளிக்க

  • 6 சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 3 பச்சை மிளகாய்
  • 2 Tbsp எண்ணெய்
  • 1 Tsp கடுகு
  • 1/2 Tsp உளுந்து
  • 1 கொத்து கருவேப்பிலை

செய்முறை

  • கருணைக்கிழங்கை நன்கு கழுவி வேக வைத்து மசித்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • தாளித்தவுடன் புளிக்கரைசலை விட்டு, அதோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தக்காளி, உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். (புளிக்கரைசல் தண்ணியாக இல்லாமல் ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும்)
  • பின்பு மசித்து வைத்த கருணைக்கிழங்கை சேர்க்கவும். பின்பு தேங்காய்த்துறுவல் சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான கருணைக்கிழங்கு மசியல் ரெடி.

Nutrition

Serving: 600G | Calories: 135kcal | Carbohydrates: 10g | Protein: 21g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Potassium: 360mg | Fiber: 2g | Sugar: 0.5g