- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
தக்காளி சாதம் தயிர் சாதம் வெஜிடபிள் சாதம் அப்படின்னா எக்கச்சக்கமான சாதம் செஞ்சிருப்பீங்க. ஆனா கருவாடு வச்சு கண்டிப்பா ஒரு தடவை கூட இந்த மாதிரி ஒரு கருவாடு சாதம் செஞ்சிருக்கவே மாட்டாங்க. ஒரே ஒரு தடவை இந்த கருவாடு சாதம் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த சாதம் ரொம்ப ரொம்ப வித்தியாசமா சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். எப்போமே கருவாடு எடுத்து அதுல பொரியல் கருவாட்டு குழம்பு கருவாட்டு தொக்கு அப்படின்னு செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி கருவாடு சாதம் செஞ்சு பாருங்க. நல்ல மணக்க மணக்க சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் ஒரு தடவ சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி சாப்பிடுவீங்க.
டேஸ்டான கருவாடு சாதம் ரெசிபி கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் அடிக்கடி கருவாடு சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது ஆனா கருவாடு ஒரு சிலருக்கு பிடிக்காது பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க. கருவாடு அடிக்கடி சாப்பிடுவது மூலமா சளி இருமல் போன்ற பிரச்சனைகள் வரவே வராது நிறைய நோய் எதிர்ப்பு சக்தி உடம்புக்கு கிடைக்கும். கண்டிப்பா மிஸ் பண்ணாம வாரத்துக்கு ஒரு தடவை கருவாடு உணவுல சேர்த்துக்கோங்க.
அப்படி சேர்க்கும் போது கொஞ்சம் வித்தியாசமா இந்த கருவாடு சாதமும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. ஞாயிற்றுக்கிழமையில ஒரு தடவை வீட்டில் மட்டன் சிக்கன் எதுவும் எடுக்க முடியலனா கருவாடு வாங்கி இந்த மாதிரி ஒரு தடவ செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். டேஸ்டான ருசியான கருவாடு சாதம் ரெசிபி கண்டிப்பா இந்த செய்முறையில் ஒரு முறை செய்து பாருங்க. உங்களுக்கு எந்த கருவாடு பிடிக்குமோ அந்த கருவாடு வச்சு இந்த ரெசிபி செய்யலாம் இதுல நம்ம குச்சி கருவாடு பயன்படுத்தியுள்ளோம். இப்ப வாங்க இந்த ருஷியான கருவாடு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நெய் மீன் கருவாடு தொக்கு
Ingredients
Method
கருவாட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளியை அரைத்து சேர்த்து சிறிதளவு உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் சாதம் சேர்த்து கருவாடு சேர்த்து கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான கருவாடு சாதம் தயார்.






